/
புகார் பெட்டி
/
சென்னை
/
புகார் பெட்டி: திருநின்றவூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சீர்கேடு
/
புகார் பெட்டி: திருநின்றவூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சீர்கேடு
புகார் பெட்டி: திருநின்றவூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சீர்கேடு
புகார் பெட்டி: திருநின்றவூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சீர்கேடு
ADDED : ஜன 16, 2025 12:39 AM

திருநின்றவூர் நகராட்சி, மேட்டு தெரு, திருமழிசை செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிவாசிகள் என, 100க்கும் மேற்பட்டோர், தினசரி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், சுகாதார மையத்தை ஒட்டி உள்ள சாலையோரத்தில், இறைச்சி கழிவு உட்பட அனைத்து விதமான குப்பை கொட்டப்படுகின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. நகராட்சி ஊழியர்கள் பல நாட்களாக குப்பை கூட அகற்றுவதில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாண்டியன்,
சமூக ஆர்வலர், திருநின்றவூர்.