/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
சாலையோரம் ஜல்லி; சாக்கடையில் அடைப்பு
/
சாலையோரம் ஜல்லி; சாக்கடையில் அடைப்பு
ADDED : அக் 06, 2025 12:01 AM

சாலைப்பணியில் சுணக்கம் கிழக்கு மண்டலம், 53வது வார்டு, மகாலட்சுமி நகரில், மகாலட்சுமி கோவில் முன்பு நடந்து வந்த சாலைப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக எந்தப்பணியும் மேற்கொள்ளப்படவில்லை. சாலையோரம் மலைபோல் குவிந்துள்ள ஜல்லி, மணலால் வாகனஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.
- கனகராஜ், மகாலட்சுமி நகர்.
கம்பம் இருக்கு விளக்கில்லை அன்னுார், குன்னத்துார், விஸ்டேரியா கார்டன் குடியிருப்பில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெருக்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதுவரை தெருவிளக்குள் பொருத்தப்படவில்லை. பேரூராட்சி, வாட்டாட்சியர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- கிருஷ்ண பெருமாள், குன்னத்துார்.
தடுப்பு சந்தில் நுழையும் 'பைக்' தடாகம் சாலை நடுவே உள்ள தடுப்புகளில் பாதசாரிகள் கடந்து செல்வதற்காக நிறைய இடங்களில் இடைவெளி விட்டுள்ளனர். வாகனங்கள் வருவதை கூட பொருட்படுத்தாமல், இருச்சக்கர வாகன ஓட்டிகள் இந்த இடைவெளியில் வருகின்றனர். இதனால், அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் நடக்கிறது. பைக் நுழைய முடியாதபடி இடைவெளியில் கற்களை வைக்க வேண்டும்.
- சுந்தரம், இடையர்பாளையம்.
கழிவுகளில் முளைத்த செடி நீலிக்கோனாம்பாளையம் பெருமாள் கோவில் பின்புறம் சாக்கடை சுத்தம் செய்த பின்பு கழிவுகளை அப்படியே போட்டுவிடுகின்றனர். மாதக்கணக்கில் தேங்கியுள்ள கழிவுகளில் புதர்செடிகளே முளைத்துவிட்து. மேலும், கழிவுகள் மீண்டும் சாக்கடையில் விழுவதால் அடைப்பு ஏற்படுகிறது.
- ஸ்ரீநிதி, கோவிந்தாபுரம்.
தார் சாலையே தீர்வு சேரன்மாநகர், ராகவேந்திரா அவென்யூ மெயின் வீதியில், சாவித்திரி நகரில் இதுவரை தார் சாலை அமைக்கவில்லை. மழை சமயங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. நீர் தேங்கி நிற்பதால் குழி தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. அடுத்த பருவமழைக்குள் விரைந்து தார் சாலை அமைக்க வேண்டும்.
- தங்கராஜ், சேரன்மாநகர்.
புதிய சாலையில் பொத்தல் கணபதி மாநகர், கொங்கு நகர், நான்காவது வீதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. வாகனங்கள் செல்லும்போது சாலையின் பல இடங்களில் குழி ஏற்பட்டுள்ளது. வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாக வாய்ப்பதால் குழியான இடங்களை, தரமான முறையில் சீரமைக்க வேண்டும்.
- சந்தான குமார், கணபதி மாநகர்.
எரியா விளக்குள் குமாரசாமி குளத்தில் பலர் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செல்கின்றனர். வார இறுதி நாட்களில், மாலை வேளையில் குடும்பத்தினருடன் பலர் வருகின்றனர் இந்நிலையில் குளத்தை ஒட்டி நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள விளக்குள் பல எரியாமல் உள்ளது.
- பாலமுருகன், வடவள்ளி.
தெருவிளக்கு வசதியில்லை குனியமுத்துார், 87வது வார்டு, மின்நகரில் பிரதான சாலைக்கு செல்லும் குறுக்கு ரோட்டில் இதுவரை தெருவிளக்குகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் இச்சாலை வழியே செல்லவே குடியிருப்புவாசிகள் அஞ்சுகின்றனர். தெருநாய்களும் அதிகளவில் இப்பகுதியில் சுற்றுகிறது. தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
- அபெல், குனியமுத்துார்.
துரத்தும் நாய்கள் கோவைப்புதுார், 90 வார்டில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடந்துசெல்வோர், பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. வீதியில் நடக்கவே குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் அஞ்சுகின்றனர். பலமுறை இதுகுறித்து புகார் கொடுத்தும் இதவரை நடவடிக்கையில்லை.
- வேல்முருகன், கோவைப்புதுார்.
இருளால் சிரமம் வடவள்ளி, அண்ணா நகர், ஐந்தாவது வீதியில் உள்ள மின்கம்பத்தில் இதுவரை தெருவிளக்கு பொருத்தவில்லை. இவ்வழியே நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் இரவு நேரங்களில், மிகவும் சிரமமாக உள்ளது. கம்பத்தில் தெருவிளக்கு பொருத்த நடவடிக்கை வேண்டும்.
- முருகானந்தம், வடவள்ளி.