/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் இணைப்பு இல்லாததால் தண்ணீர் எடுப்பதில் சிரமம்

ADDED : அக் 08, 2025 10:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் இணைப்பு இல்லாததால் தண்ணீர் எடுப்பதில் சிரமம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 33வது வார்டில் விளக்கொளி பெருமாள் கோவில் தெரு உள்ளது. இங்கு, ரேஷன் கடை கட்டடம் அருகே, மின் மோட்டார் இணைப்புடன் கூடிய குடிநீர் தொட்டி உள்ளது.
ஆனால், மோட்டார் பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்கப்படாததால், குடிநீர்தொட்டி பயன்பாட்டிற்கு வரவில்லை. அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம், மின் இணைப்பு வழங்கி, பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- -நா. அசோக்,
காஞ்சிபுரம்.