/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கொழுந்து விட்டெரிந்த கார் மீஞ்சூரில் பரபரப்பு
/
கொழுந்து விட்டெரிந்த கார் மீஞ்சூரில் பரபரப்பு
PUBLISHED ON : மே 11, 2024 12:00 AM

மீஞ்சூர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிபாளையத்தைச் சேர்ந்தவர் நித்யா. இவர் நேற்று காலை, 'ரொனால்ட் டஸ்டர்' காரில் குடும்பத்தினர் இருவருடன், சென்னை அடுத்த மீஞ்சூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
மாலை 4:30 மணியளவில் மீஞ்சூர் தேரடி தெருவில் காரை நிறுத்தியபோது, காரில் இருந்து புகை வருவதைக் கண்டு பதற்றம் அடைந்தனர். காரில் இருந்த அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வீடுகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி, தீயை அணைக்க முயன்றனர். மீஞ்சூர் போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. போலீசார் விசாரிக்கின்றனர்.