PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:சமீபகாலமாக தமிழகத்தில் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதுரையில் ஒரு வாரமாக அதிகபட்சம் 106 டிகிரியை தொட்டு வருகிறது. நேற்றும் மதுரையில் 106 டிகிரி பதிவானது.
இந்நிலையில் நேற்று மதியம், மதுரை பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகில் நடந்து வந்த 60 வயது நபர், திடீரென சுருண்டு விழுந்தார்.
அங்கிருந்தோர் தகவல் படி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்த போது, முதியவர் இறந்தது தெரிந்தது. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

