PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி,வியாசர்பாடி, மூர்த்திங்கர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் ராவ், 30. இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 9 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும், ஏழு மாத அஸ்வினி பாய் என்ற பெண் குழந்தையும் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு சளி அதிகமாக உள்ளதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர். குழந்தைக்கு சளிக்கான 'சிரப்' கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிகாலையில் நந்தினி பார்த்தபோது, குழந்தை மூச்சு பேச்சில்லாமல் இருந்துள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்ற நிலையில், மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிய வந்தது.