/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ' சீட் ' டுக்கு வேட்டு வருமா?
/
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ' சீட் ' டுக்கு வேட்டு வருமா?
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ' சீட் ' டுக்கு வேட்டு வருமா?
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ' சீட் ' டுக்கு வேட்டு வருமா?
PUBLISHED ON : ஆக 31, 2025 12:00 AM

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “எல்லாத்தையும் பேசியவர், மணல் கடத்தல் பத்தி வாயே திறக்கல பா...” என்றபடியே, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சமீபத்தில் திருச்சியில் மூணு நாள் பிரசாரம் செஞ்சாரு... தி.மு.க., அரசையும், அமைச்சர் நேருவையும் கடுமையா விமர்சனம் பண்ணி பேசினாரு பா...
“திருச்சியில், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லுார் தொகுதிகள்ல மானாவாரியா மணல் கொள்ளை நடக்கு... மணப்பாறை தொகுதியின் பல பகுதிகள்ல ஏரி, குளங்கள்ல மண்ணை வெட்டி கடத்துறாங்க பா...
“எல்லாத்தையும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் தான் செய்றாங்க... ஆனா, இதை பத்தி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவே இல்ல பா...
“இதனால, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலரும், 'நம்ம மாவட்டத்தின் முக்கிய பிரச்னையே மணல் கடத்தல் தான்... இதை பழனிசாமி கண்டுக்காம போனது ஏன்... பணம் பாதாளம் வரைக்கும் பாயும்கிறது உண்மை தானோ'ன்னு புலம்பிட்டு இருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“ரெண்டு அணியா பிரிஞ்சு செயல்படுதாவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“தமிழக பா.ஜ.,வுல, சில மாசத்துக்கு முன்னாடி மாவட்ட நிர்வாகிகளை நியமிச்சாங்கல்லா... இதுல, கோவை தெற்கு மாவட்டத்தில் சீனியர்கள் மற்றும் திறமை யானவங்களுக்கு பதவிகள் தரல வே...
“இதனால, இவங்க எல்லாம் வெறுத்து போய் தனி அணியா செயல்படுதாவ... இப்ப, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சார்புல பூத் கமிட்டி கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள் நடந்தா, அதுல பா.ஜ.,வின் ஒரு அணியினர் மட்டுமே கலந்துக்கிடுதாவ... இன்னொரு அணியினர் புறக்கணிச்சிடுதாவ வே...
“இதனால, 'கோவை மாவட்டம், பா.ஜ.,வுக்கு செல்வாக்கான ஏரியா... இங்க நிலவும் கோஷ்டிப்பூசலை தலைமை சரி பண்ணாட்டி, தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு வரும்'னு கட்சியின் மூத்த தொண்டர்கள் புலம்புதாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“சீட்டுக்கு வேட்டு வைக்கறாளேன்னு புலம்பறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த கட்சி விவகாரமுங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“போன வருஷம் நடந்த லோக்சபா தேர்தல்ல, சிவகங்கை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோத்து போனவர், சேவியர் தாஸ்... இவர், வர்ற தேர்தல்ல சிவகங்கை சட்டசபை தொகுதியில் போட்டியிட விரும்பறார் ஓய்...
“தமிழக முன்னாள் தேர்தல் அதிகாரி ஒருத்தர், சேவியரை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் அழைச்சிண்டு போய், சீட்டுக்கு பரிந்துரை பண்ணியிருக்கார்... பழனிசாமியும், 'சிவகங்கையில போட்டியிட, தேர்தல் செலவுக்கு பணத்தை தயார் பண்ணிடுங்கோ'ன்னு சொல்லியிருக்கார் ஓய்...
“சேவியரோ, 'ஏற்க னவே லோக்சபா தேர்தல்ல நிறைய செலவு பண்ணிட்டேன்... இருந்தாலும், நீங்க சொல்றதால, 75 சதவீதம் தொகையை தயார் பண் ணிடறேன்'னு சொல்லிட்டு போயிருக்கார் ஓய்...
“அதே நேரம், இப்ப சிவகங்கை எம்.எல்.ஏ.,வாகவும், அ.தி.மு.க., மாவட்ட செயலராகவும் இருக்கும் செந்தில்நாதன், மீண்டும் அங்க போட்டியிட தயாராகிண்டு இருக்கார்...
“இப்ப, திடீர்னு மேலிட ஆசியுடன், சேவியர் தாஸ் வந்து குதிச் சிருக்கறதால, அவரும், அவரது ஆதரவாளர் களும், 'தொகுதி கைநழுவிடுமோ'ன்னு கொந்தளிப்புல இருக்கா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.