/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
குழந்தை கடத்தல் வதந்திக்கு தீர்வு கிராமங்களில் விழிப்புணர்வு குழு
/
குழந்தை கடத்தல் வதந்திக்கு தீர்வு கிராமங்களில் விழிப்புணர்வு குழு
குழந்தை கடத்தல் வதந்திக்கு தீர்வு கிராமங்களில் விழிப்புணர்வு குழு
குழந்தை கடத்தல் வதந்திக்கு தீர்வு கிராமங்களில் விழிப்புணர்வு குழு
PUBLISHED ON : மார் 07, 2024 12:00 AM
சென்னை:மாநிலம் முழுதும், குழந்தை கடத்தல் தொடர்பான வதந்தி பீதியை கிளப்பி வருவதால், கிராமங்கள் தோறும் போலீசார், விழிப்புணர்வு குழுக்களை அமைத்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில், வடமாநில குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி உள்ளது.
அதில், ஆண் வேடமிட்ட பெண்கள் உள்ளனர். இவர்கள், குழந்தைகளை கடத்தி, உள் உறுப்புகளை அறுத்து எடுக்கின்றனர் என, சமூக வலைதளத்தில், வீடியோ மற்றும் ஆடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
'இது வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்' என, போலீசார் பலமுறை சொல்லிவிட்டனர். மாவட்ட எஸ்.பி.க்கள், செய்திக்குறிப்பு வாயிலாகவும் அறிவித்துவிட்டனர்.
எனினும், குழந்தை கடத்தல் வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. எல்லா கிராமங்களிலும், குழந்தை கடத்தல் பீதி ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
இதுகுறித்து, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது:
குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் ஆடியோக்களை பரப்பி பீதியை ஏற்படுத்திய நபர்கள் குறித்து, விசாரித்து வருகிறோம்.
மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் குழந்தை கடத்தல் தொடர்பான தகவல் பரவி வருகிறது. இதனால், பஞ்சாயத்து தலைவர்கள், செயலர்கள், பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு குழுக்களை ஏற்படுத்தி வருகிறோம்.
சந்தேக நபர்கள் குறித்து, அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வட மாநிலத்தவர்களை தாக்குவோர், சட்ட ரீதியாக கைது செய்யப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

