தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ தற்காலிக பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் வசூல்!

தற்காலிக பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் வசூல்!

தற்காலிக பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் வசூல்!


PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெஞ்சில் அமர்ந்ததுமே,“பொதுப்பணி துறையின்முக்கிய அதிகாரி, அடுத்தமாசம், 'ரிட்டயர்' ஆக போறதால, பணி நீட்டிப்புக்கு முயற்சி பண்றதா பேசியிருந்தோமுல்லா...” என்ற பெரியசாமிஅண்ணாச்சியே தொடர்ந்தார்...

“ஆனா, அவர் பணி நீட்டிப்பு பெறவோ, ஓய்வுக்கு பிறகு வேற பணியில சேரவோ முயற்சிபண்ணலையாம்... அதுவும் இல்லாம, 'அடுத்த மாதம் நான் ஓய்வுபெற இருக்கேன்... அதுவரைக்கும் ஒத்துழைப்பு அளிக்கவும்'னு சக பொறியாளர்கள், ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வமா கடிதமும் அனுப்பியிருக்காரு வே...” என்றார், அண்ணாச்சி.

உடனே, “விளையாட்டுநிதியை தராம இழுத்தடிக்கறா ஓய்...” என்றார்,குப்பண்ணா.

“யாருக்கு பா...” எனகேட்டார், அன்வர்பாய்.

“தமிழக விளையாட்டுமேம்பாட்டு ஆணையம்சார்பில், ஆண்டுதோறும்முதல்வர் கோப்பைக்கானவிளையாட்டு போட்டிகள்நடக்கறதோல்லியோ... பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள்னு அஞ்சு பிரிவுகள்ல, 27 விளையாட்டுகளை மாவட்ட மற்றும் மாநில அளவுல நடத்தறா ஓய்...

“இந்த வருஷத்துக்கானபோட்டிகள், போன மாசம் 4ம் தேதி துவங்கி,24ம் தேதி வரைக்கும் நடந்துது... இதுக்கான தொகையை, ஒவ்வொருமாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும், போட்டிகள் துவங்கறதுக்கு முன்னாடியே அரசு அனுப்பிடுத்து ஓய்...

“ஆனா, போட்டிகளுக்குநடுவர்களா செயல்பட்டஉடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகையை, பல மாவட்டங்கள்ல இதுவரைக்கும் தரல... 'யாராவது அதுல கை வச்சுட்டாளோ'ன்னு உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பறா ஓய்...” என்றார், குப்பண்ணா.

“புரோக்கர்களிடம் விரட்டி விடுறாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

“சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குவெளியே, 30க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் இருக்காங்க... இவங்க வச்சதுதான் ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல சட்டமா இருக்கு...

“லைசென்ஸ் எடுக்கிறது, புதுப்பிக்கிறது சம்பந்தமா யாராவது ஆபீசுக்குள்ள போய், அதிகாரிகள், ஊழியர்களிடம் விபரம் கேட்டா,'வெளியில இருக்கிற புரோக்கர்களை போய் பாருங்க'ன்னு விரட்டி விடுறாங்க... புரோக்கர்களிடம் போனா, 'டூ - வீலர் டிரைவிங் லைசென்ஸ்' வாங்க 5,000 ரூபாயை கறந்துடுறாங்க...

“யாராவது பேரம் பேசினா, 'இது முழுக்க எங்களுக்கு இல்ல... உள்ளே இருக்கிறவங்களுக்கு தான் போகுது'ன்னுகறாரா கேட்டு வாங்கிடுறாங்க...” என்றார், அந்தோணிசாமி.

“அமைச்சர் சொல்லியும்வேலை கிடைக்கல பா...”என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், துாத்துக்குடி மாவட்டத்தில் காலியா இருந்த மூணுடாக்டர் உட்பட, 24 தற்காலிக பணியிடங்களுக்கு, சமீபத்துல 'இன்டர்வியூ' நடந்துச்சு...இதுக்கு நிறைய பேர் விண்ணப்பிச்சிருந்தாங்க பா...

“ஆனா, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ரகசியமாஇன்டர்வியூ நடத்திட்டு, பணி ஆணைகளை குடுத்திருக்காங்க... இதுக்குபல லட்சங்கள் வரை கைமாறியிருக்காம் பா...

“இதனால, உள்ளூர் அமைச்சர் பரிந்துரை செய்தவங்களுக்கு வேலைதராம, அதிகாரிகள் சாக்குபோக்கு சொல்லியிருக்காங்க... இதுல, ஒரே குடும்பத்துல, ஆயுர்வேதடாக்டர் பணியை கணவரும், புரோகிராம் ஆபீசர் பணியை மனைவியும் வாங்கிஇருக்காங்க பா...

“இதெல்லாம் துறையின்முக்கிய புள்ளிக்கு தெரிஞ்சுதான் நடந்துச்சான்னு தெரியல... இது சம்பந்தமா, முதல்வருக்கும் புகார்கள் போயிருக்குது பா...” என முடித்தார், அன்வர்பாய்.

அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us