/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாநாட்டுக்கு மிரட்டி நிதி வசூலித்த 'தோழர்கள்!'
/
மாநாட்டுக்கு மிரட்டி நிதி வசூலித்த 'தோழர்கள்!'
PUBLISHED ON : டிச 14, 2024 12:00 AM

“ஆட்கள் பற்றாக்குறையால அவதிப்படுறாங்க பா...” என்றபடியே,ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
“எந்த துறையிலங்க...”என கேட்டார்,அந்தோணிசாமி.
“சென்னை ஆவடி ரயில்வே போலீசார் கட்டுப்பாட்டுல, எட்டு ரயில்வே ஸ்டேஷன்கள்வருது... தினமும், 8 லட்சம் பயணியர் இந்த ஸ்டேஷன்களை பயன்படுத்துறாங்க பா...
“ஆனா, அதுக்கு ஏத்தமாதிரி போலீசார் இல்ல...ரெண்டு எஸ்.ஐ., உட்பட24 பேர் தான் பணியில இருக்காங்க... இதனால, ரயில்வே ஸ்டேஷன்கள்லபோதை நபர்கள் தொல்லை, பிக் பாக்கெட்,மாணவர்களின், 'புட் போர்டு' அட்டகாசங்களை தடுக்க முடியாம திணறுறாங்க பா...
“சமீபத்துல, இந்து கல்லுாரி ஸ்டேஷன்ல போதை நபர்கள் சிலர், பயணியரை அச்சுறுத்தி ரகளையில ஈடுபட்டாங்க...தட்டிக்கேட்ட முதியவர்ஒருத்தரை அடிச்சு உதைச்சாங்க பா...
“போன வாரம், இதேஸ்டேஷன்ல சமோசா வியாபாரியின் மொபைல்போனையும், ஒரு பெண்ணின் தாலி செயினையும் சிலர் பறிச்சுட்டு ஓடிட்டாங்க...'இந்த மாதிரி கிரிமினல் சம்பவங்களை தடுக்க, ஆவடி ரயில்வே போலீசுக்கு கூடுதல் காவலர்களை நியமிக்கணும்'னு பயணியர் எல்லாம் கேட்கிறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“சிகரெட்டுக்கு பணம் கேட்டவரிடம் வம்பு இழுத்துட்டாரு வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“யார் ஓய் அது...” எனகேட்டார், குப்பண்ணா.
“துாத்துக்குடி மாவட்டத்துல இருக்கிறஒரு போலீஸ் ஸ்டேஷன்எஸ்.ஐ., சாதாரண உடையில், கோவில்பட்டியில் இருந்த ஒரு பெட்டி கடையில் சமீபத்துல சிகரெட் பாக்கெட் வாங்கியிருக்காரு... அதுக்கு பணம்தராம, '10 மணிக்கு மேல ஏன் கடையை திறந்து வச்சிருக்கே'ன்னு கேட்க, ரெண்டு தரப்புக்கும் தகராறு வந்துட்டு வே...
“அப்ப, எஸ்.ஐ., உற்சாக பானத்துல வேற இருந்திருக்காரு... 'உன்னை கஞ்சா கேஸ்லஉள்ள தள்ளிடுவேன்'னுமிரட்ட, கடைக்காரருக்குஆதரவா பக்கத்துல இருக்கிறவங்க திரண்டு வந்துட்டாவ வே...
“நிலைமை கைமீறி போறதுக்குள்ள அந்த வழியா வந்த வேற ஒரு எஸ்.ஐ., ரெண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி,அனுப்புனாரு... ஆனாலும், பாதிக்கப்பட்டபெட்டிக் கடைக்காரர்,இந்த சம்பவம் தொடர்பாஉயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பிட்டாரு...
“வழிப்பறி, போதையில்பெண்களிடம் ரகளை, லஞ்சம் வாங்கியதுக்கு மன்னிப்பு கேட்டதுன்னுசமீபகாலமா, துாத்துக்குடிமாவட்ட போலீசாருக்குநேரமே சரியில்ல வே...”என்றார், அண்ணாச்சி.
“தோழர்களும் மிரட்டல்வசூல்ல இறங்கிட்டாங்க...”என, கடைசி தகவலுக்குமாறிய அந்தோணிசாமியேதொடர்ந்தார்...
“திருப்பூர் மாவட்டம்அவிநாசியில், சமீபத்துல,மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் மாவட்ட மாநாடு நடத்தினாங்க... இதுக்காக, திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள்ல கட்டாய வசூல் நடத்தியிருக்காங்க... அது மட்டுமில்லாம, அரசு அலுவலகங்கள்லயும் மாநாட்டுக்கு நிதி வசூல் பண்ணியிருக்காங்க...
“அதாவது, 'மக்கள் பிரச்னையை முன்னிறுத்தி, அதிகாரிகளுக்கு எதிரா போராட்டம் நடத்துவோம்'னு மிரட்டியே, அரசு அலுவலகங்கள்ல வசூல் பண்ணியிருக்காங்க... 'தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து, அவங்களை மாதிரி இவங்களும் மாறிட்டாங்களே'ன்னு பனியன்நிறுவன முதலாளிகள்எல்லாம் புலம்புறாங்க...”என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

