/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பாசன வாய்க்கால் சேதத்தால் விவசாய நிலத்தில் நிலச்சரிவு கண்டுக்காத பொதுப்பணித்துறையால் பாதிப்பு
/
பாசன வாய்க்கால் சேதத்தால் விவசாய நிலத்தில் நிலச்சரிவு கண்டுக்காத பொதுப்பணித்துறையால் பாதிப்பு
பாசன வாய்க்கால் சேதத்தால் விவசாய நிலத்தில் நிலச்சரிவு கண்டுக்காத பொதுப்பணித்துறையால் பாதிப்பு
பாசன வாய்க்கால் சேதத்தால் விவசாய நிலத்தில் நிலச்சரிவு கண்டுக்காத பொதுப்பணித்துறையால் பாதிப்பு
PUBLISHED ON : நவ 22, 2025 03:37 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பாசன வாய்க்கால் சேதமடைந்து தண்ணீர் ஊடுருவியதால் நிலச்சரிவு ஏற்பட பூண்டு பயிரிடப்பட்ட விவசாய நிலம் அடித்து செல்லப்பட்டது.
கொடைக்கானல் பூண்டி கிராமத்திற்கு பாசனம் ,குடிநீர் ஆதாரமாக கீழ்மடை பள்ளம் குளம் உள்ளது. இக்குளத்தில் இருந்து வனப்பகுதி மார்க்கமாக 5கி.மீ., சரிவான பகுதியில் பாசன வாய்க்கால் மண் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
வாய்க்காலை காங்கிரீட்டாக மாற்ற கோரிக்கை விடுத்தும் கண்டுக்காததால் ஆங்காங்கே சேதமடைந்தது. இதனால் சரிவான பகுதியில் உள்ள நிலங்களில் தண்ணீர் ஊடுருவின. பூண்டியை சேர்ந்த முருகன் பூண்டு சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் வாய்க்கால் தண்ணீர் ஊடுருவியதால் நிலச்சரிவு ஏற்பட்டு பூண்டு விவசாயத்தோடு நிலம் அடித்து செல்லப்பட்டது.
இது போன்று ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. பொதுப்பணித்துறை , வனத்துறையினர் முறையாக ஆய்வு செய்து வாய்க்கால்களை காங்கிரீட் கொண்டு கட்டமைத்து பாசன வாய்க்கால் , பூண்டி கிராமத்தின் குடிநீர் ஆதாரமான கீழ்மடைப்பள்ளம் குளம் தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்றே செருப்பன் ஓடையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது .
விவசாயி முருகன் கூறியதாவது: பூண்டி பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பருவத்தை எட்டி உள்ளது. இதன் மூலம் ரூ. 8 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் என்ற நிலையில் பாசன வாய்க்கால் தண்ணீர் ஊடுருவியதால் நிலச்சரிவால் விவசாய நிலம் முற்றிலும் அடித்து செல்லப்பட்டு வாழ்வாதாரம் பாதித்துள்ளது.
பாதிப்பை தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு, நில சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

