/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தொடர் லஞ்ச புகாரில் சிக்கிய சுகாதார அதிகாரி 'துாக்கியடிப்பு'
/
தொடர் லஞ்ச புகாரில் சிக்கிய சுகாதார அதிகாரி 'துாக்கியடிப்பு'
தொடர் லஞ்ச புகாரில் சிக்கிய சுகாதார அதிகாரி 'துாக்கியடிப்பு'
தொடர் லஞ்ச புகாரில் சிக்கிய சுகாதார அதிகாரி 'துாக்கியடிப்பு'
PUBLISHED ON : நவ 14, 2025 02:36 AM
சென்னை: தொடர் லஞ்ச புகாரில் சிக்கிய, சோழிங்கநல்லுார் மற்றும் பெருங்குடி மண்டல சுகாதார அதிகாரி கண்ணன், பொது சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டார்.
இ.சி.ஆர்., நீலாங்கரையில் ஜனனம் என்ற கருத்தரிப்பு மையம் உள்ளது. இந்த மையத்தின் பதிவு புதுப்பிப்பு செய்ய, சோழிங்கநல்லுார் மற்றும் பெருங்குடி மண் டல சுகாதார அதிகாரியாக இருந்த கண்ணன் லஞ்சம் கேட்டுள்ளார்.
அவர் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால், பதிவு புதுப்பிப்பு பணியை கிடப்பில் போட்டார்.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயனுக்கு புகார் சென்றது. மேலும், மாநகராட்சி விதியை மீறி, 50க்கும் மேற்பட்ட சுகாதார சான்றுகள் வழங்கியதாக, ஏற்கனவே இவர் மீது புகார் உள்ளது.
இவர், பொது சுகாதாரத்துறையில் இருந்து, மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி. தொடர் புகாரால், இவரை பொது சுகாதாரத்துறைக்கு இடம் மாற்ற உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சோழிங்கநல்லுார், பெருங்குடி மண்டலத்தில் இருந்து, பொது சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த இரண்டு மண்டலத்தின் சுகாதார அதிகாரி பொறுப்பை, அடையாறு மண்டல சுகாதார அதிகாரி ஷீலா சேர்த்து கவனிப்பார் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

