/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு பஸ் டிரைவர்களுக்கு மாவட்ட நீதிபதிகள் 'அட்வைஸ்'
/
அரசு பஸ் டிரைவர்களுக்கு மாவட்ட நீதிபதிகள் 'அட்வைஸ்'
அரசு பஸ் டிரைவர்களுக்கு மாவட்ட நீதிபதிகள் 'அட்வைஸ்'
அரசு பஸ் டிரைவர்களுக்கு மாவட்ட நீதிபதிகள் 'அட்வைஸ்'
PUBLISHED ON : டிச 18, 2025 05:48 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டெக்டர்களுக்கு பாதுகாப்பான பஸ் இயக்கம் தொடர்பாக மாவட்ட நீதிபதிகள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள், கிளைகளில் பாதுகாப்பான பஸ் இயக்கத்தை கடந்த 15ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க மேலாண் இயக்குநர் குணசேகரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதையொட்டி, நேற்று, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில், அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டெக்டர்களுக்கு பாதுகாப்பான பஸ் இயக்கம் தொடர்பாக மாவட்ட நீதிபதிகள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட அமர்வு முதன்மை நீதிபதி மணிமொழி, சீனியர் சிவில் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர், டிரைவர், கண்டெக்டர்களுக்கு பாதுகாப்பு இயக்கம் தொடர்பான சட்ட நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரையாற்றினர்.
தொடர்ந்து, தனது பணியில் விபத்தின்றி பஸ் இயக்கி பணிபுரிந்த 20 டிரைவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பொது மேலாளர்கள் ரவீந்திரன் (தொழில்நுட்பம்), ஜெகதீஷ், துரைசாமி (மனிதவளம்) உட்பட துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள்,டிரைவர்கள், கண்டெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

