தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வெளிநாட்டுக்கு தப்பியோட தி.மு.க., புள்ளிகள் திட்டம்!

 வெளிநாட்டுக்கு தப்பியோட தி.மு.க., புள்ளிகள் திட்டம்!

 வெளிநாட்டுக்கு தப்பியோட தி.மு.க., புள்ளிகள் திட்டம்!

1


PUBLISHED ON : ஆக 09, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026 12:26 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெஞ்சில் அமர்ந்த கையுடன், ''குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாதுன்னு சொல்லுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமம் இருக்கு... இங்க, கல் மற்றும் கிராவல் மண் குவாரி அமைக்க அனுமதி கேட்டு ஒருத்தர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கனிமவளத் துறைக்கு, கடந்த தி.மு.க., ஆட்சியில விண்ணப்பிச்சாரு...

''மா.க., வாரியம் சார்பில், குவாரிக்கு தேவையான அலுவலகம் கட்டவும், கனிமவளத் துறை சார்பில், நிர்வாக அனுமதிக்கான பரிந்துரை கடிதத்தையும், கடந்த மார்ச் மாசம், அதாவது, தி.மு.க., ஆட்சியிலயே குடுத்துட்டாவ வே...

''ஆனா, 'இந்த குவாரிகளை அமைச்சா, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள்ல நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும்'னு, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காவ... இது சம்பந்தமா, த.வெ.க.,வைச் சேர்ந்த, கனிமவளத் துறை அமைச்சர் பிரபு மற்றும் திருப்பத்துார் எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதியிடம் மனுக்களும் குடுத்தாவ வே...

''அவங்க அதை கண்டுக்கவே இல்லை... இதனால, 'இந்த கிராமத்துல குவாரிகளுக்கு அனுமதி இல்லைன்னு முதல்வர் விஜய் வெளிப்படையா அறிவிக்கணும்'னு, கிராம மக்கள் கேட்காவ வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

''கோட்டப் பொறியாளர் மாதிரி வலம் வரார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''யாருங்க அது...'' என கேட்டார் அந்தோணிசாமி.

''காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில், ஒரு அதிகாரி இருக்கார்... இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இவரை இங்கிருந்து மாத்த மாட்டேங்கறா ஓய்...

''தன்னை மீறி, துறையில எந்த, 'டீலிங்'கும் நடக்கக்கூடாதுன்னு விழிப்பா இருக்கார்... இதனால, 'கோட்டப் பொறியாளரின் மொபைல் போன் எண்ணை யார் கேட்டாலும் தரப்டாது'ன்னு, சக ஊழியர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கார் ஓய்...

''அதோட, 'எதா இருந்தாலும் என்கிட்ட பேசச் சொல்லுங்கோ'ன்னும் சொல்லிடறார்... இதனால, 'ஏதாவது அவசர தேவைக்கு கூட கோட்டப் பொறியாளரை தொடர்பு கொள்ள முடியலை'ன்னு, ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சுரேஷ் வர்றாரு... சுக்கு காபி குடுங்க...'' என்ற அன்வர்பாயே, ''வெளிநாட்டுக்கு தப்பியோட முடிவு பண்ணிட்டாங்க பா...'' என்றபடியே தொடர்ந்தார்...

''தி.மு.க., ஆட்சியில லஞ்சம், முறைகேடுகள்ல ஈடுபட்டவங்க மேல வழக்கு பதிவு பண்ணிட்டு இருக்காங்களே... அந்த வரிசையில், உதயநிதியின் நெருங்கிய நண்பரா இருந்து, 'தம்பி பாஸ்'னு கடந்த ஆட்சியில் அழைக்கப்பட்டவர் மேல, நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் 'டாஸ்மாக்' ஊழல் சம்பந்தமா ரெண்டு வழக்குகள் போட்டிருக்காங்க பா...

''இவரது சகோதரர், தமிழக போலீஸ்ல ஐ.பி.எஸ்., அதிகாரியா இருக்காரு... இவர், தன் தம்பியை வழக்குகள்ல இருந்து விடுவிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் இல்லை பா...

''இதனால, 'எப்ப வேணும்னாலும் நம்மை கம்பி எண்ண வச்சிடுவாங்க'ன்னு, 'தம்பி'க்கு பயம் வந்துடுச்சு... அதனால, வெளிநாட்டுக்கு தப்பிச்சு போயிடலாம்னு இருக்காராம்... இவரைப் போல, இன்னும் சில தி.மு.க., புள்ளிகளும், வெளிநாடுகளுக்கு தப்பும் திட்டத்துல இருக்காங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.

''ரத்தீஷ், இங்கன உட்காரும்... சர்வேஷ் ராஜ் வந்தா, எனக்கு பேசச் சொல்லும் வே...'' என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us