தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/‘கட்டிங்’ அதிகாரி உத்தரவால் கதறும் ஊழியர்கள்!

‘கட்டிங்’ அதிகாரி உத்தரவால் கதறும் ஊழியர்கள்!

‘கட்டிங்’ அதிகாரி உத்தரவால் கதறும் ஊழியர்கள்!


PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“கனிமொழியை களமிறக்கும்படி தபால் அனுப்பியிருக்காங்க பா...” என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் அன்வர்பாய்.

“தி.மு.க., தகவலா ஓய்...’’ என கேட்டார் குப்பண்ணா.

‘‘ஆமா... சென்னை கொளத்துார் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கே... இங்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மறுபடியும் போட்டியிடுவாரான்னு தெரியல பா...

“அவர் போட்டியிடாத பட்சத்துல, அவரது சகோதரியான கனிமொழி எம்.பி.,யை அங்க களமிறக்கணும்னு, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வினர் சொல்றாங்க... தமிழக சட்டசபையில், பா.ம.க., – தே.மு.தி.க.,வுக்கு சவுமியாவும், பிரேமலதாவும் தலைவர்களா இருக்காங்க...

“இவங்க வரிசையில கனிமொழியும் சட்டசபைக்கு போனா, ஆளுங்கட்சிக்கு எதிரான வாதங்களை தெளிவா எடுத்து வைப்பாங்க... ‘கொளத்துார் தொகுதியும் ஸ்டாலின் குடும்பத்தினர் கையை விட்டு போகாம இருக்கும்’னு, தலைமைக்கு கடிதங்கள் அனுப்பி இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.

“இன்னும் தி.மு.க.,வினர் தான் இருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.

“எந்த துறையில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“ஊரக வேலை உறுதி திட்டத்தில், பணியாளர்களை ஒருங்கிணைக்க பணித்தளப் பொறுப்பாளர்கள் இருக்காங்க... இவங்க தான் பணியாளர் எண்ணிக்கையை சரிபார்த்து, அவங்களுக்கு வேலைகளை ஒதுக்குவாங்க...

“இந்த பணித்தளப் பொறுப்பாளர்களை, அந்தந்த ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் தான் நியமிப்பாங்க... ‘100 நாட்களுக்கு ஒரு முறை இந்த பணித்தளப் பொறுப்பாளர்களை மாத்தணும்’னு விதி இருக்குதுங்க...

“ஆனா, கடந்த தி.மு.க., ஆட்சியில நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள்ல பலர், ஒரு வருஷம் தாண்டி இன்னும் நீடிக்கிறாங்க... இவங்களை உடனடியா மாத்தும்படி, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சமீபத்துல உத்தரவு போட்டாங்க...

“ஆனா, சில இடங்கள்ல மட்டும் தான் மாத்தியிருக்காங்க... அதுவும் கூட, ஏற்கனவே இந்த பணியில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்டு நீக்கப்பட்ட தி.மு.க.,வினருக்கே மறுபடியும் பணித்தளப் பொறுப்பாளர் வேலையை குடுத்திருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.

“ஒன்றியம் சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குல்லா...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய அலுவலகத்துல ஒரு அதிகாரி இருக்காரு... இவர், தனக்கு கீழே இருக்கிற மண்டல துணை பி.டி.ஓ.,க்களிடம், ‘நான் சொல்ற இடத்துல தான் ஊராட்சிகளுக்கான சுகாதாரப் பொருட்களை வாங்கணும்... ஊராட்சி செயலர்கள் நீட்டுற, ‘பில்’கள்ல எல்லாம் இஷ்டத்துக்கு கையெழுத்து போட்டு பணத்தை விடுவிக்கக் கூடாது’ன்னு நிபந்தனைகள் விதிச்சிருக்காரு வே...

“ஏன்னா, பொருட்கள் வாங்குற இடத்துல இருந்து அதிகாரிக்கு, ‘கட்டிங்’ வந்துடுது... அதேபோல, ஊராட்சி செயலர்கள் வைக்கிற பில்களுக்கு பணம் ஒதுக்கவும், ‘கட்டிங்’ எதிர்பார்க்காரு வே...

“ஏற்கனவே, பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் நடந்த 1 கோடி ரூபாய் வளர்ச்சிப் பணிகளை இந்த அதிகாரி சரியா கண்காணிக்காம விட்டுட்டதா, மாவட்ட நிர்வாகத்திடம், ‘குட்டு’ வாங்கினாரு... இதுல சாமர்த்தியமா தப்பிட்ட அதிகாரி, பணிகளை சரியா கண்காணிக்காம விட்டுட்டதா ஒரு உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளருக்கு, ‘மெமோ’ குடுத்துட்டாரு... இதனால, இவர் மேல, ஒன்றிய ஊழியர்கள் எல்லாம் கடும் அதிருப்தியில இருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“முத்துகணபதி,

இப்படி உட்காரும்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us