sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

குஜராத்தில் போலி நீதிமன்றம் நீதிபதி போல நடித்தவர் கைது

/

குஜராத்தில் போலி நீதிமன்றம் நீதிபதி போல நடித்தவர் கைது

குஜராத்தில் போலி நீதிமன்றம் நீதிபதி போல நடித்தவர் கைது

குஜராத்தில் போலி நீதிமன்றம் நீதிபதி போல நடித்தவர் கைது


PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத், குஜராத்தின் காந்திநகரில் போலி நீதிமன்றம் அமைத்து, தன்னை நீதிபதி என கூறிக்கொண்டு பல வழக்குகளில் தீர்ப்பளித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத்தின் காந்திநகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன். இவர், தன்னை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தீர்ப்பாய நடுவர் எனக் கூறிக்கொண்டு, போலியான நீதிமன்றம் ஒன்றை காந்திநகரில் அமைத்துள்ளார்.

சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில தகராறு வழக்குகளை கண்டறிந்து, அதில் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து பேசியுள்ளார். அவர்களுடைய வழக்கை தீர்த்து வைப்பதாக கூறி பெரும் தொகை பெற்றுக் கொண்டு, அவரது போலி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.

அங்கு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களை போல ஆட்களை வாடகைக்கு அமர்த்தி, மனுதாரர்களை நம்ப வைத்துள்ளார். விசாரணையின் இறுதியில் பணம் கொடுத்தவருக்கு சாதகமான தீர்ப்பையும் அளித்து வந்துள்ளார். இந்த போலி நீதிமன்றம் கடந்த ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 2019ல், அரசு நிலத்தின் மீது உரிமை கோரிய நபருக்கு சாதகமான தீர்ப்பை அளித்தார். பின், அரசு வருவாய் ஆவணங்களில் மனுதாரரின் பெயரை சேர்க்க கோரி, அந்த போலி உத்தரவு நகலை இணைத்து, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கறிஞர் வாயிலாக மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த உத்தரவு நகல் போலி என்பதை அறிந்த நீதிமன்ற பதிவாளர் ஹர்திக் தேசாய் கரன்ஜ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், டுபாக்கூர் நீதிபதி மோரிஸ் சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us