/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பெண்ணையாறு கரை உடைப்பை சீரமைக்க ரூ.57 கோடியில் 'கேபியன்' தொழிற்நுட்பம் பெண்ணையாறு கரை உடைப்பு சீரமைக்க ரூ.57 கோடியில் 'கேபியன்' தொழிற்நுட்பம்

PUBLISHED ON : ஆக 21, 2025 12:00 AM
சென்னை:பெண்ணையாற்றில் நான்கு இடங்களில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பை, 'கேபியன்' தொழிற்நுட்பம் வாயிலாக, நீர்வளத் துறையினர் சீரமைக்கவுள்ளனர்.
கர்நாடகாவில் உற்பத்தியாகும் பெண்ணையாறு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பயணித்து, கடலுாரில் வங்க கடலில் கலக்கிறது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால், பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பல்வேறு இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டது. கடலுாரில், பெண்ணையாறு கடலில் கலக்கும் இடத்தில் இருந்து, ஒரு கி.மீ.,க்கு முன் கரை உடைந்தது. பெண்ணையாறு - உப்பனாறு இணையும் இடத்திலும், மூன்று இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டது.
இதனால், பெரிய அளவில் வெள்ள சேதம் ஏற்பட்டது.
இந்த நான்கு கரை உடைப்பையும், 'கேபியன்' என்ற தொழிற்நுட்பம் வாயிலாக சீரமைக்க, நீர்வளத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இரும்பு கூண்டு அல்லது 'கான்கிரீட்' கலவையால் செய்யப்பட்ட பெட்டியில் பாறைகள், மணல் நிரப்பப்படும் தொழிற்நுட்பத்தை, கேபியன் என்று அழைக்கின்றனர். இவற்றை, அடிக்கடி கரைகள் உடையும் இடத்தில் சீராக அடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், மீண்டும் கரைகள் உடைவது தடுக்கப்படும். கடலுாரில், 57 கோடி ரூபாய் செலவில், இத்தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
***