PUBLISHED ON : நவ 30, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சில நாட்களாக பெய்து வரும் மழையால், சேலம் வ.உ.சி., மார்க்கெட்டுக்கு, பூக்கள் வரத்து குறைந்துள்ளது. அதேநேரம் கார்த்திகை தீபம், ஐயப்ப பக்தர்கள், முகூர்த்த சீசன் உள்ளிட்ட காரணங்களால், அதன் தேவை அதிகரித்துள்ளது.
நேற்று வ.உ.சி., மார்க்கெட்டில், பூக்கள் வரத்து வெகுவாக சரிந்தது. இதனால் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்தது. அதன்படி குண்டுமல்லி கிலோ, 2,800 ரூபாய், முல்லை, 1,600, காக்கட்டான், ஜாதிமல்லி, 1,000, அரளி, 220, நந்தியாவட்டம், 600 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் சிறு வியாபாரிகள் பூக்கள் வாங்க முடியாமல் திரும்பினர்.'

