PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த, சித்தாலப்பாக்கம் பிரகாஷ், 28, அவரது நண்பர்கள், ஆனந்தராஜ், 35, வெற்றிவேல், 32, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு சித்தாலப்பாக்கம், தனியார் மருத்துவமனை எதிரே, அரசு 'டாஸ்மாக்' கடையில் மது அருந்தினர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள், பிரகாஷின் தலையில் கற்களால் தாக்கினர். இதில் பிரகாஷின் மண்டை, மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில், பிரகா�ன் தலைக்கு நான்கு தையல் போடப்பட்டது. ஆனந்தராஜ், வெற்றிவேல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.