/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கொளத்துார் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
/
கொளத்துார் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM
சென்னை, போதைப்பொருள் வைத்திருந்த, கொளத்துார் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரெட்டேரி மீன் சந்தை பகுதியில், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 16ல், 'அல்பிரஸோலம்' போதைப்பொருள் வைத்திருந்த, கொளத்துார் திருப்பதி நகரைச் சேர்ந்த ஏழுமலை, 22, என்பவரை, ராஜமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடிய, 250 கிராம் 'அல்பிரஸோலம்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், 'ஏழுமலை மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது' எனக் கூறி, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி அவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.