/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது
/
சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது
PUBLISHED ON : மார் 16, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல், சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் புழல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, மாதவரம் பேருந்து நிலையம் சென்ற தனியார் சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தி செல்வதாக தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பேருந்தை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் பயணித்த, ஆந்திர மாநிலம், அனக்காபள்ளியைச் சேர்ந்த நாகேஷ்வர் ராவ், 38, என்பவரின் பையில், நான்கரை கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.