/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தண்டவாளத்தில் சென்றவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
/
தண்டவாளத்தில் சென்றவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
தண்டவாளத்தில் சென்றவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
தண்டவாளத்தில் சென்றவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிமலை :தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர், மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தார்.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி, நேற்று காலை, மின்சார ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பரங்கிமலை - கிண்டி இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க நபர், அந்த ரயிலில் அடிபட்டு துாக்கி வீசப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே இறந்த அவரது உடலை கைப்பற்றி, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். இறந்தவரின் ஊர், பெயர், விலாசம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.