/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ஒடிசா அணி அபார ஆட்டம்
/
முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ஒடிசா அணி அபார ஆட்டம்
முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ஒடிசா அணி அபார ஆட்டம்
முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ஒடிசா அணி அபார ஆட்டம்
PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM

சென்னை, முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், ஒடிசா அணி, 4 - 1 என்ற 'கோல்' கணக்கில், கர்நாடகா அணியை தோற்கடித்தது.
எம்.சி.சி., - முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டியின், 95-வது தொடர், சென்னை, எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடக்கிறது.
இத்தொடரில், நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம், பாரத் பெட்ரோலியம், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, மஹாராஷ்டிரா உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' அடிப்படையில் நடைபெறுகின்றன.
நேற்று மாலை நடந்த முதல் போட்டியில், கர்நாடகா மற்றும் ஒடிசா அணிகள் மோதின. இதில் ஒடிசா ஹாக்கி அணி, முதல் பாதி ஆட்டத்தில் 3 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
முடிவில், 4 - 1 என்ற கோல் கணக்கில், ஒடிசா அணி வெற்றி பெற்றது.போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
இன்று மதியம் 2:00 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் - மஹாராஷ்டிரா அணிகளும், கர்நாடகா - ஐ.ஓ.சி., அணிகளும் மோதுகின்றன.