/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'பசை'யான பதவிக்காக 'லாங் லீவ்' போட்ட அதிகாரி!
/
'பசை'யான பதவிக்காக 'லாங் லீவ்' போட்ட அதிகாரி!
PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM

''உயர் அதிகாரிகள் உத்தரவு, காத்தோட போயிட்டுல்லா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...''என கேட்டார், அன்வர்பாய்.
''ஆதிதிராவிடர் நலத் துறை விடுதிகள்ல, மாணவ - மாணவியரைசேர்க்கிறப்ப, அவங்களதுபெற்றோர் மொபைல் போனுக்கு ஓ.டி.பி.,அனுப்பி, அதை ஆன்லைனில் பதிவு செய்துட்டுதான் சேர்க்கணும்னு, உயர் அதிகாரிகள் உத்தரவு போட்டிருக்காவ...
''பல விடுதிகள்ல, மாணவர்களை சேர்க்காமலே, சேர்த்துட்டதா போலிக் கணக்கு காட்டுறதைத் தவிர்க்கவே, இப்படி கிடுக்கிப்பிடி போட்டிருந்தாவ வே...
''ஆனாலும் சில மாவட்டங்கள்ல, துறையின் மாவட்ட அதிகாரிகள்உதவியுடன், விடுதிக் காப்பாளர்கள், ஓ.டி.பி.,பதிவு செய்யாமலேயே மாணவர்களை சேர்த்திருக்காவ... 'இதுல நிறைய முறைகேடு நடந்திருக்கிறதால, சேர்க்கை விபரங்களை முறையா ஆய்வு செய்யணும்'னு நேர்மையான விடுதிக் காப்பாளர்கள் பலரும் வலியுறுத்திட்டு இருக்காவ வே...''என்றார், அண்ணாச்சி.
''அத்துமீறி ஆபாசமாநடந்துகிட்டவரை காப்பாத்தி விட்டுட்டாங்க...''என, அடுத்த தகவலுக்குமாறினார் அந்தோணிசாமி.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''துாத்துக்குடி, வடபாகம் ஸ்டேஷன்லவேலை பார்க்கிற போலீஸ்காரர் ஒருத்தர், சமீபத்துல,'புல்'லா தண்ணியை போட்டுட்டு, பெண்கள் மட்டும் தனியா இருந்த ஒரு வீட்டுக்குள்ள அத்துமீறி நுழைஞ்சிருக்காரு... அங்கிருந்த பெண்களிடம் ஆபாசமாசைகை வேற காட்டியிருக்காருங்க...''
''அதிர்ச்சியான பெண்கள், சிப்காட் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்தாங்க... புகாரை பதிவு செய்த போலீசார்,சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மேல எந்த நடவடிக்கையும் எடுக்காம விட்டுட்டாங்க... இது சம்பந்தமா, எஸ்.பி., கவனத்துக்கும் தெரிவிக்கல...''
''மாவட்ட போலீஸ்லஇருக்கிற சில அதிகாரிகளின்ஜாதி பாசம் தான், போதைபோலீஸ்காரர் மேல நடவடிக்கை எடுக்காமதடுத்துட்டதா சொல்றாங்க... 'இதே, சாதாரண நபர் இப்படி செஞ்சு சிக்கியிருந்தா, அவரை போலீசார் பிடிச்சிருப்பாங்க... பாத்ரூம்ல வழுக்கி விழுந்து, அவருக்கு கை, கால் எல்லாம் உடைஞ்சு போயிருக்கும்'னு நேர்மையான போலீசார்எல்லாம் புலம்புறாங்க...''என்றார், அந்தோணிசாமி.
''கேட்ட இடம் கிடைக்கறதுக்காக, 'லாங்லீவ்'ல இருக்கார் ஓய்...''என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக வனத்துறையில்ஒரே இடத்துல மூணு வருஷம் இருந்த வனச்சரகர்களை, வன மண்டலத்துக்கு உள்ளேயும், ஆறு வருஷம் ஒரே மண்டலத்தில் இருந்தவாளை, வேற மண்டலத்துக்கும் சில மாதங்களுக்கு முன்னாடி மாத்தினா ஓய்...''
''நீலகிரி மண்டலத்தில்ஆறு ஆண்டுகள் முடிச்சஒரு சில வனச்சரகர்கள் மட்டும், தங்களுக்கு வேண்டிய உயர் அதிகாரிகள் ஆசியுடன், தொடர்ந்து அதே இடத்துல பணியில நீடிக்கறா...''
''அதே மாதிரி, வேற மண்டலத்துல இருந்து நீலகிரிக்கு இடம் மாறி வந்த வனச்சரகர் ஒருத்தருக்கு, அவர் எதிர்பார்த்த பணியிடம் கிடைக்கல... இதனால, தனக்கு ஒதுக்கப்பட்ட சரகத்துல, 'ஜாயின்' பண்ணாம, பல மாசமா லீவ்லயே இருக்கார் ஓய்...''
''அதே நேரம், உயர் அதிகாரிகள் உதவியுடன்,'பசை'யான சரகத்தை வாங்கற முயற்சியிலும் ஈடுபட்டிருக்கார்... 'என்னதான், துறையில அமைச்சர்கள் மாறினாலும்,அதிகாரிகள் ஆசி இருந்தா,எதையும் சாதிக்கலாம்'னுஊழியர்கள் தரப்புல பேசிக்கறா ஓய்...'' எனமுடித்தார், குப்பண்ணா.
''மாரியப்பன் இங்கனஉட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சிஎழ, நண்பர்கள் கிளம்பினர்.