/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு மானியத்தை ' ஆட்டை ' போடும் அதிகாரிகள்!
/
அரசு மானியத்தை ' ஆட்டை ' போடும் அதிகாரிகள்!
PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

“போலீஸ்காரரை பலிகடா ஆக்கி, பிரச்னையைமுடிச்சிட்டாரு வே...” என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
“விளக்கமா சொல்லுங்கபா...” என்றார், அன்வர்பாய்.
“மதுரை, தெற்குவாசல் போலீஸ் லிமிட்லவர்ற பந்தடி தெருவில், தீபாவளி நேரத்துல பைக்குல வந்த ரெண்டு திருடனுங்க, நடந்து போனபெண்ணிடம் நகையை பறிச்சானுவ... அந்த பெண் போராடியதால, தரதரன்னு ரோட்டுல இழுத்துட்டு போய் செயினை அத்துட்டு பறந்துட்டானுவ வே...
“இந்த வீடியோ சமீபத்துல வெளியாகி, சிட்டியில அதிர்ச்சியை ஏற்படுத்துச்சு... இதுவரைக்கும் திருடனுங்களைபிடிக்க முடியல... அதே நேரம், வீடியோ ரிலீஸ் ஆனதால, கடுப்பான போலீஸ் கமிஷனர் லோகநாதன், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசாருக்கும், தனிப்படை போலீசாருக்கும் செமத்தியா, 'டோஸ்' விட்டிருக்காரு வே...
“அதுவும் இல்லாம, பணியில் மெத்தனமா இருந்ததா தனிப்படைபோலீஸ்காரர் கமல் என்பவரை, 'சஸ்பெண்ட்'பண்ணிட்டாரு... இந்த சஸ்பெண்ட் தகவலையும்,பத்திரிகைகளுக்கு தெரியாம போலீசார் அமுக்கிட்டாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“பணி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“பொதுப்பணித் துறையில் முக்கிய பொறுப்புலஇருக்கற அதிகாரி, அடுத்தமாதம், 'ரிட்டயர்' ஆறார்...போன அ.தி.மு.க., ஆட்சியில், வேற பதவியில் இருந்த இந்த அதிகாரி,மூத்த ஐ.ஏ.எஸ்., ஒருத்தரை தரக்குறைவா விமர்சனம் பண்ணியதால,மதுரைக்கு துாக்கி அடிக்கப்பட்டார் ஓய்...
“தி.மு.க., ஆட்சி வந்ததும், மதுரையை சேர்ந்த முக்கிய புள்ளி மற்றும் நிதித்துறை உயர்அதிகாரியை பிடிச்சு, சென்னைக்கு வந்து முக்கிய பதவியையும் பிடிச்சுண்டார்... இவர் ரிட்டயர் ஆனதும், பணிநீட்டிப்பு வழங்க முயற்சிகள் நடக்கறது ஓய்...
“ஆனா, 'ரிட்டயர் ஆறவாளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது'என்ற அரசின் கொள்கைமுடிவை சுட்டிக்காட்டி, பொறியாளர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கறது...அதனால, அதிகாரிக்குரியல் எஸ்டேட் ஆணையம், மெட்ரோ ரயில், சி.எம்.டி.ஏ.,ன்னு வேறஏதாவது துறையில் பதவிவழங்கலாமான்னு யோசிக்கறா... ஆனா,அதெல்லாம் ஐ.ஏ.எஸ்., களுக்கு ஒதுக்க வேண்டியபணிங்கறதால, அவாளும்இவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“தொழில் முனைவோர்பெயர்ல ஏகப்பட்ட மோசடிகள் நடக்குது பா...” என்றார், அன்வர்பாய்.
“எந்த ஊருலங்க...” எனகேட்டார், அந்தோணிசாமி.
“திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான்ல சிப்காட்தொழிற்பேட்டை இருக்கு...இங்க, பிராங்க்ளின் என்பவர், நண்பர்களுடன்சேர்ந்து, 'ஸ்டார் கிராப்ட்'என்ற பாத்திரம் தயாரிக்கும் உருக்கு தொழிற்சாலை நடத்துறாரு பா...
“தொழில் தளவாட கருவிகள் வாங்குறதுக்காக, அரசிடம் இருந்து இவருக்கு, 22 லட்சம்ரூபாய் மானியம் வந்திருக்கு... அந்த தொகையை நிறுவனத்துக்குவழங்காத தொழில் மையஅதிகாரிகள், 'ஸ்டார் கிராப்ட்ஸ்' என்ற பெயர்லபோலியா வங்கி கணக்குதுவக்கி, அதுல பணத்தைபோட்டு சுருட்டிட்டாங்கபா...
“இது பத்தி, பிராங்க்ளின் தரப்பு, மாவட்ட தொழில்மைய அதிகாரி மற்றும்கலெக்டரிடம் புகார் தெரிவிச்சும் நடவடிக்கைஇல்ல... 'கடனை உடனைவாங்கி தொழில் செய்றவங்க வயித்துல அடிக்கிறாங்களே'ன்னு தொழில்முனைவோர் எல்லாம் புலம்புறாங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.

