/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 25 சதவீத வெள்ளி கொலுசுக்கு ஆர்டர்
/
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 25 சதவீத வெள்ளி கொலுசுக்கு ஆர்டர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 25 சதவீத வெள்ளி கொலுசுக்கு ஆர்டர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 25 சதவீத வெள்ளி கொலுசுக்கு ஆர்டர்
PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM
சேலம்:தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் விற்பனை அதிகளவில் இருக்கும். இதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சிவதாபுரம், பனங்காடு உள்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட பட்டறைகளுக்கு, தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் பெறப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது:
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன. இந்த ஆர்டர்களை தயாரிக்கும் பணியில், பட்டறையில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 25 சதவீத வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன், 75 சதவீத ஆர்டர் கிடைத்துவிடும். தற்போது, 25 சதவீத ஆர்டர் மட்டும் வந்துள்ளது. அதாவது ஒரு லட்சம் வெள்ளி கொலுசுகள் வரை ஆர்டர் கிடைக்கும் என, எதிர்பார்த்த நிலையில், 25,000 கொலுசுகளுக்கு மட்டும் ஆர்டர் கிடைக்கப்பெற்றுள்ளது. மழையால் ஆர்டர் குறைந்துள்ளது. மீதி ஆர்டர் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.
வெள்ளி கிராம் சமீபத்தில், 110 ரூபாய் வரை சென்ற நிலையில் தற்போது விலை குறைந்து, 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள், வெள்ளி பொருட்களை அதிகம் வாங்க வாய்ப்புள்ளது.
கால் கொலுசு, சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு, 2,000 முதல், 30,000 ரூபாய், அரைஞாண் கொடி, 1,500 முதல், 30,000 ரூபாய், மெட்டி, 200 முதல், 1,500 ரூபாய், தண்டை, 3,000 முதல், 5,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தற்போது வெள்ளி கிராம், 95 ரூபாய், பார் வெள்ளி, 95,000க்கு விற்பனையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.