தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/தி.மு.க., – எம்.பி.,க்கள் நிறுவனங்களிடம் கூடுதல் மது கொள்முதல்!

தி.மு.க., – எம்.பி.,க்கள் நிறுவனங்களிடம் கூடுதல் மது கொள்முதல்!

தி.மு.க., – எம்.பி.,க்கள் நிறுவனங்களிடம் கூடுதல் மது கொள்முதல்!

7


PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM

7


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெ து வடையை கடித்தபடியே, “பல பணியிடங்கள் காலியா கிடக்கு ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.

“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்துல விபச்சார தடுப்பு பிரிவு இருக்கு... இதுல, எட்டு மாசமா இன்ஸ்பெக்டர் பதவி காலியாவே கிடக்கு... இன்ஸ்பெக்டர் பணியை, உதவி கமிஷனர் தான் கவனிக்கறார் ஓய்...

“அதேபோல, செவ்வாப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகள்ல நிறைய குற்றச் சம்பவங்கள் நடக்கும்... ஆனா, செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பதவி, ஒரு மாசமா காலியா கிடக்கு ஓய்.. .

“ஆவடி கமிஷனரகத்தில், 30 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... இங்க இருக்கற இன்ஸ்பெக்டர்கள் எல்லாம், தினமும் ராத்திரி ரோந்து போய், அதை படம் எடுத்து பதிவு செய்யணும்... ஆனா, சிலர் இதை செய்யாம, வீட்டுக்கு போய் துாங்கிடறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“பதவி வந்ததும் கண்டுக்க மாட்டேங்கிறார்னு புலம்புறாரு பா...” என்றார் அன்வர்பாய்.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“த.வெ.க., வேலுார் மேற்கு மாவட்ட செயலரா இருக்கிறவர் வேல்முருகன்... இவர், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியா இருந்து அரசியலுக்கு வந்தாரு பா...

“சட்டசபை தேர்தல்ல, அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்டு தோத்து போயிட்டாரு... வேலுார் தொகுதியில, த.வெ.க., சார்பில் வினோத் கண்ணன் என்பவர் ஜெயிச்சிருக்காரு பா...

“ஜெயிக்கிற வரைக்கும் வேல்முருகனை சுத்தி சுத்தி வந்த இவர், இப்ப அவரை ஏறெடுத்தும் பார்க்கிறது இல்ல... சமீபத்துல, ரெண்டு தொகுதி இடைத்தேர்தல்ல த.வெ.க.,வுக்கு கிடைச்ச வெற்றியை கொண்டாடலாம்னு, வினோத் கண்ணனுக்கு வேல்முருகன் போன் போட்டிருக்காரு பா...

“ஆனா, அவர் போனையே எடுக்கல... ‘தேர்தல் நேரத்துல கட்சிக்கு வந்துட்டு, பழைய ஆட்களை மதிக்க மாட்டேங்கிறாங்களே’ன்னு வேல்முருகன் புலம்பிட்டு இருக்காரு பா...” என்றார் அன்வர்பாய்.

“ஆட்சி மாறினாலும் வியாபாரத்துல எந்த பாதிப்பும் இல்ல வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“த.வெ.க., ஆட்சிக்கு வந்த மே மாசம், தி.மு.க.,வின், ‘உலகை ஆளும்’ எம்.பி.,யின் மதுபான ஆலையில் இருந்து, 2,700 பெட்டி மதுபானங்களை தான், ‘டாஸ்மாக்’ நிறுவனம் வாங்குச்சு... ஆனா இது, ஆகஸ்ட் மாசத்துல 1.23 லட்சம் பெட்டிகளா ஏறிட்டு வே...

“இந்த எம்.பி.,யின் மகன், சமீபத்துல த.வெ.க.,வுல சேர்ந்துட்டாரு... அதனால கூட கொள்முதல் கூடியிருக்கலாம்னு சொல்லலாம்... ஆனா, த.வெ.க.,வை கடுமையா எதிர்க்கும், ‘மில்க்’ எம்.பி.,யின் நிறுவனம் மே மாசம் 1.87 லட்சம் பெட்டி மதுபானங்களையும், ஆகஸ்ட்ல 3.11 லட்சம் பெட்டி மதுபானங்களையும் டாஸ்மாக்கிற்கு வித்திருக்கு வே...

“அதேபோல, ஜெயலலிதாவுக்கு நிழலா இருந்த பெண் தலைவரது குடும்பம் நடத்தும் ஆலையிடம், மே மாசம் ஒரு பெட்டி கூட வாங்கல... அப்புறம் யாரை பிடிச்சாங்களோ தெரியல... அடுத்தடுத்து கொள்முதல் உயர்ந்து, ஆகஸ்ட்ல 2.44 லட்சம் பெட்டிகள் மதுபானங்களை வித்துட்டாவ வே...

“இதை பார்த்துட்டு, ‘இந்த கொள்முதல்ல ஏகப்பட்ட மர்மங்கள் ஒளிஞ்சிருக்கு’ன்னு, டாஸ்மாக் ஊழியர்கள் எல்லாம் புலம்புதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“ஜெகத், பாலு இப்படி உட்காருங்க... சசிகலா சவுக்கியமாங்க...” என, நண்பர்களிடம் அந்தோணிசாமி விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us