தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/அதிகாரிகளை மிரட்டும் இணை கமிஷனரின் பாதுகாவலர்!

அதிகாரிகளை மிரட்டும் இணை கமிஷனரின் பாதுகாவலர்!

அதிகாரிகளை மிரட்டும் இணை கமிஷனரின் பாதுகாவலர்!


PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘‘பட்டியல் சமுதாய ஓட்டுகளை வளைக்க, சில யோசனைகளை குடுத்திருக்காரு வே...’’ என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘எந்த கட்சியிலங்க...’’ என கேட்டார் அந்தோணிசாமி.

‘‘த.வெ.க.,வின் வெற்றிக்கு பட்டியல் சமுதாய ஓட்டுகளும் முக்கிய காரணம்... இதனால, அந்த சமுதாய ஓட்டுகளை வளைக்க, பா.ஜ., தரப்பு திட்டமிடுது வே...

‘‘பா.ஜ., தேசிய செயலரான வெங்கடேசன், சமீபத்துல மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவை, டில்லியில் பார்த்து பேசியிருக்காரு... அப்ப, ‘தமிழகத்துல பட்டியல் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட எம்.சி.ராஜா, சுவாமி சகஜானந்தர், எல்.சி.குருசாமி, அயோத்திதாச பண்டிதர், ரெட்டை மலை சீனிவாசன், வீரன் சுந்தரலிங்கம், வீரமங்கை குயிலி உள்ளிட்டோரின் சேவையை போற்றும் வகையில் நினைவு தபால் தலை வெளியிடணும்’னு கோரிக்கை மனுவை குடுத்திருக்காரு வே...

‘‘அவங்களது தியாகங்கள் எல்லாம் இளைய தலைமுறைக்கு தெரிஞ்சா தான்... நமக்கும் அவங்க ஓட்டுகள் கிடைக்கும்னு சொல்லிட்டு வந்திருக்காரு வே...’’ என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘துாய்மை பணியாளர்களை நியமிக்கணும்னு கேக்கறா ஓய்...’’ என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

‘‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமூக நீதி விடுதிகள்ல, துாய்மை பணியாளர்களாக இருந்தவாளுக்கு, சமீபத்தில் சமையலர் பதவி உயர்வு வழங்கி, வேற மாவட்டங்களுக்கு இடமாறுதல் பண்ணிட்டா... இதனால், இந்த விடுதிகளில் துாய்மை பணியாளர்கள் இல்ல ஓய்..

‘‘புதுசா யாரையும் நியமிக்கவும் இல்ல... அதிகாரிகளிடம் விடுதி காப்பாளர்கள் கேட்டதற்கு, ‘உங்க சொந்த பணத்துல துாய்மை பணியாளர்களை ஏற்பாடு பண்ணிக்கோங்க’ன்னு அசால்டா சொல்றாளாம்...

‘‘துாய்மை பணியாளர்கள் இல்லாம, மாணவியர் விடுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவறது ஓய்...’’ என்றார் குப்பண்ணா.

‘‘யார் மாறினாலும் இவர் மாற மாட்டேங்கிறாரு பா...’’ என்றார் அன்வர்பாய்.

‘‘எந்த துறை விவகாரமுங்க...’’ என கேட்டார் அந்தோணிசாமி.

‘‘சென்னை, வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தின் கீழ் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் வருது... இணை கமிஷனருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாவலர் ஒருத்தர் இருக்காரு பா...

‘‘வழக்கமா, இந்த பணியில் ஆயுதப்படை போலீசார் தான் இருப்பாங்க... ஆனா, அவங்களை ஓரங்கட்டிட்டு, சட்டம் – ஒழுங்கு பிரிவைச் சேர்ந்த இவர் வந்துட்டாரு பா...

‘‘கிட்டத்தட்ட 10 வருஷங்களுக்கும் மேலா இணை கமிஷனரின் பாதுகாவலராவே வலம் வர்றாரு... இணை கமிஷனர்கள் மாறினாலும், இவர் மாற மாட்டேங்கிறாரு பா...

‘‘ இணை கமிஷனரின் வீட்டுக்கு ஆட்டுக்கறி வேணுமா... புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷன், மளிகை பொருட்களா இருந்தா சவுகார்பேட்டை ஸ்டேஷன், பூ, பழங்கள் வேணுமா... பூக்கடை ஸ்டேஷன்னு, அந்தந்த இன்ஸ்பெக்டர்களிடம் வாங்கி தரச் சொல்றாரு பா...

‘‘இந்த வகையில மட்டும் மாசம் 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு செலவு வச்சிடுறாரு... இணை கமிஷனரின் பாதுகாவலர் என்ற பெயர்லயே உயர் அதிகாரிகளையும் மிரட்டிட்டு வலம் வர்றாரு பா...’’ என முடித்தார் அன்வர்பாய்.

‘‘இளையராஜா, இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...’’ என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us