PUBLISHED ON : நவ 03, 2026 12:00 AM

‘‘பெ ரிய அடிதடியை தடுத்துட்டாங்க பா...’’ என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
‘‘எங்க ஓய்...’’ என கேட்டார் குப்பண்ணா.
‘‘முத்துராமலிங்க தேவர் குரு பூஜை சமீபத்துல நடந்துச்சே... திருச்சியில் இருக்கிற அவரது சிலைக்கு, த.வெ.க.,வைச் சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாலை போட்டு மரியாதை செஞ்சாங்க பா...
‘‘எதிர்க்கட்சியான தி.மு.க., தரப்புல, முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில கட்சியினர் திரண்டு வந்தாங்க... ஆளுங்கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிச்சிட்டு இறங்குறதுக்குள்ள, தி.மு.க.,வினரை போலீசார் அனுமதிச்சிட்டாங்க பா...
‘‘உடனே த.வெ.க.,வினர், ‘முதல்வர் விஜய் வாழ்க’ன்னு கோஷம் எழுப்ப, பதிலுக்கு தி.மு.க.,வினர், ‘ஸ்டாலின் வாழ்க, நேரு வாழ்க’ன்னு கோஷம் எழுப்ப, ரெண்டு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் வந்துடுச்சு...
‘‘உடனே போலீஸ் அதிகாரிகள் ஓடோடி வந்து, ஆளுங்கட்சியினரை சிலைக்கு பின்பக்கம் இருந்த படிக்கட்டுகள் வழியா இறங்கச் சொல்லி, நிலைமையை சமாளிச்சாங்க பா...’’ என்றார் அன்வர்பாய்.
‘‘பினாமி பெயர்ல பணிகளை எடுத்து செய்றாருங்க...’’ என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
‘‘சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்துல ஒரு செயற்பொறியாளர் இருக்காரு... இவர், ‘நடிகர் திலகம்’ பெயர்ல நடத்துற, ‘பினாமி’ நிறுவனம் மூலமா முதல்வர் விஜயின் வீடு இருக்கும் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதிகள்ல மழைநீர் வடிகால் பணிகளை எடுத்து செய்றாருங்க...
‘‘இந்த பணிகளை ஏனோ தானோன்னு செய்றாங்க... உதாரணமா, மூணு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய, ‘சென்ட்ரிங்’ பலகைகளை எட்டு முறைக்கு மேல் பயன்படுத்தி, ‘கான்கிரீட்’ போடுறாங்க...
‘‘ஆனா பணிகளுக்கான, ‘பில்’ தொகையை மட்டும் உடனுக்குடன் குடுத்துடுறாங்க... இது சம்பந்தமா அதிகாரிகளுக்கு பல புகார்கள் போயும் நடவடிக்கை இல்லைங்க...’’ என்றார் அந்தோணிசாமி.
‘‘ஆனந்தராஜ், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...’’ என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ‘‘இவர் மட்டும் எப்படி தப்பிச்சார்னு ஆச்சரியப்படுதாவ வே...’’ என்றார்.
‘‘யாரு, எதுல இருந்து தப்பிச்சது பா...’’ என கேட்டார் அன்வர்பாய்.
‘‘தி.மு.க., ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரா இருந்த மகேஷ், 100 கோடி ரூபாய்க்கு மேல ஊழல் பண்ணிட்டதா, அவர், அவரது உதவியாளர் முத்துகுமார், ஆசிரியர் சங்க நிர்வாகி அரசகுமார்னு மூணு பேரை கைது பண்ணியிருக்காங்கல்லா...
‘‘கடந்த ஆட்சியில, ஆசிரியர்களின் குறைகளை கேட்க, ‘ஆசிரியர் மனசு’ என்ற திட்டத்தை துவங்கிய மகேஷ், அதன் ஒருங்கிணைப்பாளரா, புதுக்கோட்டை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியரா இருந்த ஒருத்தரை நியமிச்சாரு வே...
‘‘அவரோ, அமைச்சருடன் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி, துறையின் இயக்குநருக்கே உத்தரவு போடும் அளவுக்கு வளர்ந்துட்டாரு... தமிழகம் முழுக்க போய் கல்வித் துறை அதிகாரிகளுடன், ‘மீட்டிங்’ போடுறது, கலெக்டர்களை பார்க்கிறதுன்னு சகல அதிகாரங்களுடன் வலம் வந்தாரு வே...
‘‘ஆசிரியர்கள் இடமாறுதல், 7,000 கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் நியமனங்கள்ல எல்லாம் வசூல்ல புகுந்து விளையாடியதா, இவர் மீது அப்பவே குற்றச்சாட்டுகள் வந்துச்சு... இந்த சூழல்ல, ‘100 கோடி ரூபாய் ஊழல்ல இவரை மட்டும் எப்படி சேர்க்காம விட்டுட்டாவ’ன்னு, துறைக்குள்ளயே முணுமுணுப்புகள் கேட்கு...
‘‘இப்ப, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர், அடுத்து தன்னையும் ‘துாக்கிடுவாங்களோ’ன்னு பயத்துல இருக்காரு வே...’’ என முடித்தார் பெரியசாமி அண்ணாச் சி.
‘‘சதீஷ்குமார், நாளைக்கு பார்க்கலாம் பா...’’ என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
