sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

ரேஷன் கடை வேலைக்கு ரூ.10 லட்சம் வசூல்!

/

ரேஷன் கடை வேலைக்கு ரூ.10 லட்சம் வசூல்!

ரேஷன் கடை வேலைக்கு ரூ.10 லட்சம் வசூல்!

ரேஷன் கடை வேலைக்கு ரூ.10 லட்சம் வசூல்!

3


PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“கோவில் கோவிலா போய் கும்பிடுதாவ வே...”என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“யாரை சொல்றீங்க...”என கேட்டார், அந்தோணிசாமி.

“நடிகர் சூர்யா நடிச்ச, கங்குவா படம் சமீபத்துலரிலீசாகி, படுதோல்வி அடைஞ்சிட்டுல்லா... கிட்டத்தட்ட, 170 கோடிரூபாய் பட்ஜெட்ல எடுத்தபடம், பெரிய அளவுல அடிவாங்கிட்டு வே...

“இதனால, தன் அடுத்தபடம் வெற்றி அடையணும்னு சூர்யா, மனைவிஜோதிகாவோட கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகைகோவில்ல சாமி தரிசனம்செஞ்சாரு... அடுத்து, திருப்பதிக்கு ஜோதிகா மட்டும் போனாங்க வே...

“சமீபத்துல, பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில்ல, சூர்யா சிறப்பு வழிபாடு நடத்தியிருக்காரு... இந்த கோவிலுக்கு இப்ப வி.ஐ.பி.,க்கள் பலரும் போறாவ வே...

“குறிப்பா, அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள்,தி.மு.க., அமைச்சர்கள்னுபலரும் படையெடுக்காவ...நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் சமீபத்துல போயிருந்தாரு... இவங்களால வருமானமும் கொட்டுறதால, அறங்காவலர்களும்இவங்களை விழுந்து விழுந்து கவனிக்காவ வே...”என்றார், அண்ணாச்சி.

“உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுறாரு பா...” என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.

“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.

“அ.தி.மு.க., பொதுக்குழுவை, டிசம்பர் கடைசியில தான் கூட்ட இருந்தாங்க... ஆனா, 'இந்த மாசம் 31ம் தேதியுடன் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் கலைக்கப்படுது'ன்னு மாநில தேர்தல் கமிஷன்ல இருந்து, 'சோர்ஸ்' ஒருத்தர், பழனிசாமிக்கு தகவல் தந்திருக்காருப்பா...

“இதனால தான் பொதுக்குழுவை, 15ம்தேதியே கூட்டுறாராம்...ஜனவரியில பொங்கல் முடிஞ்சு, உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறதால, அதுக்கு கட்சியினர் எப்படி தயாராகணும்னு பொதுக்குழுவுல ஆலோசனைகள் வழங்கஇருக்காருப்பா...

“கட்சியில, அமைப்பு ரீதியா மாவட்டங்களின்எண்ணிக்கையை உயர்த்தி,தன் விசுவாசிகள் பலருக்குபதவிகள் வழங்கவும் பழனிசாமி முடிவுபண்ணியிருக்காரு... 'அநேகமா, ரெண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர்னு கட்சி அமைப்பு பிரிக்கப்படலாம்'னு அ.தி.மு.க., வட்டாரங்கள்ல சொல்றாங்க பா...”என்றார், அன்வர்பாய்.

“ரேஷன் கடை வேலைக்கு 10 லட்சம் ரூபாய் வசூல் பண்றா ஓய்...” என, கடைசி மேட்டருக்குகட்டியம் கூறினார் குப்பண்ணா.

“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.

“பெரம்பலுார் மாவட்டத்துல கூட்டுறவுசங்கங்கள் நடத்துற ரேஷன்கடைகள்ல, 31 விற்பனையாளர் பணியிடத்தைநேரடி நியமனம் வாயிலாநிரப்ப போறா... இதுக்கு,அக்., 9 முதல் நவ., 7ம் தேதி வரை 2,533 பேரிடம் விண்ணப்பங்கள் வாங்கினா ஓய்...

“இவாளிடம் நவ., 25முதல் 29ம் தேதி வரை நேர்காணலும் நடந்தது...இந்த வேலைக்கு விண்ணப்பிச்ச பலரும்,எப்படியாவது வேலையைவாங்கிடணும்னு முட்டி மோதிண்டு இருக்கா ஓய்...

“இவாளை ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் பார்த்து, அமைச்சர், எம்.எல்.ஏ., மற்றும் கூட்டுறவு துறை உயரதிகாரிகள் பலரிடம் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு இருக்கிறதா சொல்லி, 'வேலை வாங்கி தர்றேன்'னு, 5 லட்சம்முதல் 10 லட்சம் ரூபாய்வரை வசூல் பண்ணிண்டுஇருக்கா ஓய்...” எனமுடித்தார், குப்பண்ணா.

அரட்டை கச்சேரி முடிய, பெரியவர்கள் புறப்பட்டனர்.






      Dinamalar
      Follow us