/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆர்.ஏ.புரம் சாய் பாபா மடத்தில் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' கண்காட்சி
/
ஆர்.ஏ.புரம் சாய் பாபா மடத்தில் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' கண்காட்சி
ஆர்.ஏ.புரம் சாய் பாபா மடத்தில் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' கண்காட்சி
ஆர்.ஏ.புரம் சாய் பாபா மடத்தில் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' கண்காட்சி
PUBLISHED ON : ஜூலை 27, 2025 12:00 AM
சென்னை :இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' வழங்கும், ஒரு தனித்துவமான முயற்சியாக, 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' என்ற இரண்டு நாள் கண்காட்சி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுந்தரம் சாய் பாபா மடத்தில் நடைபெற உள்ளது.
சத்ய சாயி சேவா அமைப்புகள் மற்றும் சத்ய சாயி வித்யா வாஹினியின் ஏற்பாடில் நடக்கும் இந்த கண்காட்சியில் வரும் 28ம் தேதி மதியம் 12:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை; 29ல் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, கண்காட்சியை பார்வையிடலாம்.
இந்த நடமாடும் அறிவியல் கண்காட்சி, மாணவர்களுக்கு விண்வெளியின் அதிசயங்கள், நுணுக்கமான விஷயங்கள், அரிய தகவல் உள்ளிட்டவற்றைஎளிதில் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேஸ்வரி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'அனைத்து வயதினருக்கும் கல்வியும், ஊக்கமும் தரக்கூடியதாக கண்காட்சியாக இருக்கும்.
'ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு இது முக்கியமான கண்காட்சியாகும். இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாணவர்கள் நேரில் உரையாடும் அரிய வாய்ப்பையும் பெறுவர். அனுமதி இலவசம்' என்றனர்.