/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தேசிய நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., மாணவி வெள்ளி
/
தேசிய நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., மாணவி வெள்ளி
தேசிய நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., மாணவி வெள்ளி
தேசிய நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., மாணவி வெள்ளி
PUBLISHED ON : ஜூன் 17, 2025 12:00 AM

சென்னை, தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி மோனா ஸ்ரீ, வெள்ளி பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு நீச்சல் சங்கம் மற்றும் ட்ரை டு சாம்ப் நீச்சல் அமைப்பு சார்பில், 'அக்வாபெஸ்ட் 25 சென்னை' எனப்படும் கடல் சார் போட்டியின் நான்காவது பதிப்பு, கோவளத்தில் கடந்த 15ம் தேதி நடந்தது. இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டின் 500க்கும் அதிகமான வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதன் 5 கி.மீ., நீச்சல் போட்டியில் பங்கேற்ற சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி மோனா ஸ்ரீ, 1 மணி நேரம் 32 நிமிடம் 42 வினாடியில் போட்டியை முடித்து, இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளி பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.