PUBLISHED ON : அக் 11, 2026 12:00 AM

இ ஞ்சி டீக்கு, ‘ஆர்டர்’ தந்தபடியே, “எங்க போனாலும், திரும்பவும் பழைய இடத்துக்கே வந்துடுறாருங்க...” என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாரு வே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“துாத்துக்குடியில் ஒரு போலீஸ் எஸ்.ஐ., இருக்காரு... போக்குவரத்து பிரிவுல இருக்கிற இவரை, தேர்தல் நேரம் உட்பட பல காரணங்களுக்காக வேற பிரிவுகளுக்கு அனுப்புவாங்க...
“ஆனா, உயர் அதிகாரிகளை சரிக்கட்டி மறுபடியும் போக்குவரத்து பிரிவுக்கே வந்துடுறாரு... கிட்டத்தட்ட, 10 வருஷத்துக்கும் மேலா போக்குவரத்து பிரிவுலயே வேலை பார்த்துட்டு இருக்காருங்க...
“நகருக்குள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்றதுல அக்கறை காட்ட மாட்டேங்கிறாரு... ஆக்கிரமிப்பாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் லாரி உரிமை யாளர்களுக்கு சாதகமா செயல்பட்டு, ‘கட்டிங்’ வாங்குறாரு... அதிகாரிக ளுக்கு முறையா பங்கு குடுத்துடுறதால, அவங்களும் இவருக்கு சாதகமா இருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“சண்முகபாலன், தள்ளி உட்காரும்...” என்ற குப்பண்ணாவே, “கடைக்கு தலா, 2 லட்சம் ரூபாய் வசூல் பண்றா ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“தமிழக எல்லையா ன ஓசூர் ஜூஜூவாடியில், 750 மீட்டர் துாரத்துக்குள்ள 44 பட்டாசு கடைகள் இருக்கு... கர் நாடக மக்கள் வருகை யால, தீபாவளி நேரத்துல இ ங்க நன்னா வியாபாரம் நடக்கும் ஓய்...
“அதேநேரம், இப்படி தொடர்ச்சியா கடைகள் இருக்கறதால, 2023ல் கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை விபத்துல நிறைய பேர் இறந்தது மாதிரி அபாயம் ஏற்படலாம்னு, உள்ளூர் மக்கள் பயப்படறா... இதனால, இந்த கடைகள்ல ஆய்வு நடத்த, வருவாய் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்தா ஓய்...
“அவா ஆய்வுக்கு வராம இருக்கறதுக்காக, கடைக்கு தலா 5 லட்சம் ரூபாய் பேசி, முதல் கட்டமா 2 லட்சம் ரூபாய் வசூல் பண்ணி குடுக்க ஏற்பாடுகள் நடக்கறது... அதிகாரிகளுக்கு குடுத்த பணத்தை ஈடுகட்ட, பட்டாசுகள் விலையை உயர்த்தி விக்கவும் கடைக்காரா எல்லாம் முடிவு பண்ணியிருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“தற்காலிக ஊழியரின் அதிகாரி அவதாரத்தை கேளுங்க வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“திருச்சி மாவட்டம், துறையூர் தாசில்தார் அலுவலகத்தில், ‘டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரா’ ஒருத்தர் இருக்காரு... 20 வருஷத்துக்கும் மேலா, இங்கனயே தற்காலிக ஊழியரா இருக்காரு வே...
“இதனால, இங்க வர்ற தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான, ‘கட்டிங்’ வசூலை சரியா வாங்கி குடுத்துடுதாரு... மணல் கொள்ளை கும்பல், விதிகளை மீறி செயல்படும் செங்கல் சூளை அதிபர்களிடம் லட்சக்கணக்கில் மாமூல் வசூல் பண்ணி, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிரிச்சு குடுக்காரு வே...
“இவரது கண்ணசைவு இல்லாம தாசில்தார் அலுவலகத்துல எந்த வேலையும் நடக்காது... குறிப்பா, தாசில்தார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கான சான்றிதழ்கள், ‘அப்ரூவல்’ அதிகாரத்தை இவரே பயன்படுத்தி, லட்சக்கணக் கில் சம்பாதிக்காரு வே...
“இவரது ஆதிக்கத்தால ஊழியர்கள் பலரும் கடுப் புல இருக்காவ... தாசில் தார் பெயரை பயன்படுத்தி மிரட்டி காரி யம் சாதிக்கும் இவரை பத்தி, முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கவும் தயாராகிட்டு இருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
பேச்சு முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.
