தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பூத்துக்குலுங்கும் அற்புத மூலிகை ஆவாரம் பூ

 பூத்துக்குலுங்கும் அற்புத மூலிகை ஆவாரம் பூ

 பூத்துக்குலுங்கும் அற்புத மூலிகை ஆவாரம் பூ


PUBLISHED ON : ஜன 07, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மருத்துவ குணம் கொண்ட அற்புத மூலிகையான ஆவாரம் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது.

'ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ' என்று ஆவாரம் பூவின் மருத்துவ குணங்களை பழமொழி வழியாக நம் முன்னோர் கூறியதை அறியலாம்.

குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்களில் ஆவாரையும் ஒன்று. பொன் மஞ்சள் நிறத்தில் தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வறட்சியான காலங்களில் கூட தன்னிச்சையாக வளர்ந்து பூத்துக் காய்த்து தொங்கும் இந்த செடிக்கு மருத்துவ குணங்கள் அதிகம்.

இதன் பூ, காய், பட்டை, வேர், இலை என ஐந்து பாகங்களும் பல்வேறு மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இந்த ஆவாரம் பூக்கள் சிங்கம்புணரி பகுதியில் தற்போது அதிக அளவில் பூத்துக் குலுங்குகிறது. குறிப்பாக வேங்கைப்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் இப்பூக்களாகவே தெரிகிறது.

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போது காப்பு கட்டுவதற்கும் வீட்டு வாசலிலும் இப்பூக்களை தோரணமாக தொங்கவிடுவர்.

இப்பகுதியில் போதிய மழை இல்லாமல் விவசாயம் பொய்த்து பகுதியில் வேலைவாய்ப்பற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் இந்த பூக்களை பறித்து சித்த மருத்துவக் கம்பெனிகளுக்கு விற்று பணம் சம்பாதித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us