/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் 'எஸ்கேப்' பாதியில் நிற்கும் குளம் சீரமைப்பு பணி
/
ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் 'எஸ்கேப்' பாதியில் நிற்கும் குளம் சீரமைப்பு பணி
ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் 'எஸ்கேப்' பாதியில் நிற்கும் குளம் சீரமைப்பு பணி
ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் 'எஸ்கேப்' பாதியில் நிற்கும் குளம் சீரமைப்பு பணி
PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM
சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆரில் குளம் மேம்படுத்தும் பணியை, 23 மாதங்களாகியும் முடிக்காமல், பாதியில் நிறுத்திவிட்டு ஓடிய ஒப்பந்ததாரரை, அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆர்., நேரு நகரில், ஒரு ஏக்கர் பரப்பு கொண்ட குளம் உள்ளது. இந்த குளம், சகதி, குப்பை நிரம்பி குட்டையாக இருந்தது. அதனால், போதிய அளவில் மழைநீரை சேமிக்க முடியவில்லை.
இதையடுத்து, குளத்தை ஆழமாக வெட்டி, கரையை பலப்படுத்தி, நடைபயிற்சி பாதையுடன் மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்கு, முதற்கட்டமாக, 97 லட்சம் ரூபாய் ஒதுக்கி, 2023ம் ஆண்டு, ஆக., மாதம் பணி ஆணை வழங்கப்பட்டது.
சரவணா என்ற ஒப்பந்த நிறுவனம், மேம்பாட்டு பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்தது.
ஒன்பது மாதங்களில் பணிகளை முடிக்கவும், பணி முடிந்தபின் கூடுதலாக, 52 லட்சம் ரூபாய் ஒதுக்கவும், மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால், பணி ஆணை வழங்கி 23 மாதங்கள் ஆகியும், 50 சதவீதம் பணிகள் தான் நடந்துள்ளன.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன், பணியை நிறுத்திவிட்டு, ஒப்பந்த நிறுவனம் வேறு இடத்திற்கு சென்றுள்ளது.
இதனால், பணியை முடிக்க முடியாமலும், கூடுதல் நிதியை பெற முடியாமலும் அதிகாரிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஒப்பந்ததாரரிடம் கேட்டால், வேறு இடத்தில் பணி எடுத்துள்ளதாக கூறுகிறார். 'பணி செய்ய முடியாவிட்டால் கடிதம் கொடுத்துவிடுங்கள்' என கூறி விட்டோம்.
ஒரு கட்டத்தில், மொபைல் போனையும் எடுக்க மறுக்கின்றனர். ஏன் பணியை முடிக்கவில்லை என கேட்கும் உயர் அதிகாரிகளுக்கு, பதில் கூற முடியாமல் தவிக்கிறோம்.
வேறு ஒப்பந்ததாரர் வழியாக, இந்த ஒப்பந்ததாரரை தீவிரமாக தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.