/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
22 குழந்தைகள் மரணத்துக்கு காரணமானவர்... கைது தரமற்ற இருமல் மருந்து தயாரித்து விநியோகித்தவர்
/
22 குழந்தைகள் மரணத்துக்கு காரணமானவர்... கைது தரமற்ற இருமல் மருந்து தயாரித்து விநியோகித்தவர்
22 குழந்தைகள் மரணத்துக்கு காரணமானவர்... கைது தரமற்ற இருமல் மருந்து தயாரித்து விநியோகித்தவர்
22 குழந்தைகள் மரணத்துக்கு காரணமானவர்... கைது தரமற்ற இருமல் மருந்து தயாரித்து விநியோகித்தவர்
PUBLISHED ON : அக் 10, 2025 12:00 AM

சென்னை :இருமல் மருந்து குடித்து, 22 குழந்தைகள் பலியான விவகாரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் உட்பட மூன்று பேரை, மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு குழு போலீசார், சென்னை அசோக் நகரில் நேற்று கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த ஆகஸ்டில், 'கோல்ட்ரிப்' என்ற இருமல் மருந்து குடித்த குழந்தை ஒன்று பலியானது. இக்குழந்தைக்கு டாக்டர்களின் பரிந்துரையின்படியே இருமல் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
ரசாயனம் எனினும், அடுத்தடுத்து இதே இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தன. நேற்று மேலும் இரு குழந்தைகள் உயிரிழந்தன.
பிரேத பரிசோதனையில் குழந்தைகளின் சிறுநீரகங்களில், 'டை எதிலீன் கிளைக்கால்' என்ற ரசாயனம் படிந்திருப்பது தெரியவந்தது; இது, விஷத்தன்மை உடையது. சிறுநீரகங்களில் படிந்து, அதை செயலிழக்கச் செய்யும் தன்மை உடையது .
அதனால், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், நச்சுத்தன்மை உள்ள ரசாயன பொருட்கள் கலந்திருப்பதை கண்டறிந்தனர். இந்த இருமல் மருந்து, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த, 'ஸ்ரீசன் பார்மா' என்ற மருந்து கம்பெனியில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ம.பி., மாநில போலீசார், ஸ்ரீசன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தனர். குழந்தைகளின் உயிர்பலிக்கு காரணமான நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது.
இக்குழு போலீசார், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் வந்தனர். சம்பந்தப்பட்ட கம்பெனி செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்; ஆனால், பூட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து, சென்னை அசோக் நகரில் வசித்து வரும் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், 75, அவரது நிறுவனத்தின் மேலாளர் ஜெயராமன், ஆய்வக உதவியாளர் மகேஸ்வரி ஆகியோரை நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.
இந்த இருமல் மருந்து குடித்து, மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; அதுபற்றியும் விசாரணை நடக்கிறது.
48.6 சதவீதம் நச்சு 'கோல்ட்ரிப்' மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில், 'டை எதிலீன் கிளைக்கால்' என்ற நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருள் 48.6 சதவீதம் கலந்திருப்பது
“இந்த அளவுக்கு அதிகமான டை எதிலீன் கிளைக்கால் கலப்பு என்பது மிகவும் ஆபத்தானது,” என, தமிழக முன்னாள் மருந்து தர ஆய்வாளர் சிவபாலன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
'கோல்ட்ரிப்' என்பது, காய்ச்சல் மற்றும் இருமலுக்கான மருந்து. இதிலுள்ள பாரசிட்டமால், தண்ணீரில் முழுதும் கரையாது; மிக குறைந்த அளவே கரையும். இது கரைவதற்கு, 'புரோப்பிலின் கிளைக்கால்' சேர்க்க வேண்டும். அப்போது தான், 'சிரப்' உருவாக்க முடியும்.
இந்த புரோப்பிலின் கிளைக்காலில், டை எதிலீன் கிளைக்கால் எனும் துாய்மையற்ற வேதிப்பொருள் உள்ளது. இது மருந்துகளில், 0.1 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், கோல்ட்ரிப் மருந்தில், 48.6 சதவீதம் இருந்திருக்கிறது. இதுதான், மருந்தை நச்சுதன்மையாக மாற்றி, உடல்நலத்தை பாதித்துள்ளது. இந்த மருந்தை தயாரித்த நிறுவனம், தயாரிப்புக்கு முன், தயாரிப்பின் போது, அதன்பின் என, மூன்று நிலைகளில் தரத்தை ஆய்வு செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.