தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முப்பெரும் விழா

 ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முப்பெரும் விழா

 ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முப்பெரும் விழா


PUBLISHED ON : ஜன 25, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இளைய பாரதம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளைய பாரதம் சார்பில், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த நாள், இளையோர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், இளையோர் மன்ற வளர்ச்சி முகாம் என முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார்.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேசியதாவது; சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், போர் கைதிகளாக இருந்த நுாற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் செய்தார். இவரது வீரத்தை நாம் நினைவு கூற வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைமுறை என்பதால், ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் வாழ்வில் முன்னேற வேண்டும் என கூறினார். அதைத் தொடர்ந்து, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லுாரி டீன் அசோக், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us