/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : கிர் தேசிய பூங்கா
/
தகவல் சுரங்கம் : கிர் தேசிய பூங்கா
PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
கிர் தேசிய பூங்கா
ஆப்ரிக்காவுக்கு வெளியே சிங்கத்தை அதன் இயற்கையான வாழ்விடத்தில், கிர் தேசிய பூங்காவில் தான் பார்க்க முடியும். சமீபத்தில் பிரதமர் மோடி இங்கு சென்று வந்தார். இது குஜராத்தின் ஜூனாகத், கிர் சோம்நாத், அம்ரெலி மாவட்ட எல்லையில் உள்ளது. சிங்கங்களை பாதுகாக்க 1965ல் இப்பூங்கா உருவாக்கப்பட்டது. அப்போது 200 சிங்கங்கள் வாழ்ந்தன. இது 2020ல் 674 என அதிகரித்தது. பரப்பளவு 1430 சதுர கி.மீ. சிங்கம் தவிர புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள், பறவைகள் வாழ்கின்றன. ஆண்டுதோறும் மழைக்காலத்தில் (ஜூன் 16 - அக். 15), சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.