/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : போலியோ, ஐ.நா., தினம்
/
தகவல் சுரங்கம் : போலியோ, ஐ.நா., தினம்
PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
போலியோ, ஐ.நா., தினம்
உலகில் அமைதி, நல்லுறவை வளர்ப்பது, நோய், வறுமையை ஒழிப்பது உட்பட பல பணிகளில் ஐ.நா., சபை செயல்படுகிறது. இது 1945 அக். 24ல் உருவாக்கப்பட்டது. இதன் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக். 24ல் ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக்.24ல் உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் எனும் 'போலியோமியெலிட்டிஸ்' சுருக்கமே 'போலியோ'.