உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 14, 2026 12:22 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
பெரிய நன்னீர் ஏரி
நீர்பிடிப்பு பரப்பளவு (82,100 சதுர கி.மீ.,) அடிப்படையில் உலகின் பெரிய நன்னீர் ஏரி என 'சுப்பீரியர் ஏரி' அழைக்கப்படுகிறது. நீளம் 560 கி.மீ. அகலம் 260 கி.மீ. சராசரி ஆழம் 483 அடி. உலகின் நன்னீரில் 10 சதவீதம் இதில் உள்ளது. அமெரிக்கா - கனடா எல்லையில் அமைந்து உள்ளது. இதற்கான நீர்வரத்து பல ஆறுகளில் இருந்து கிடைக்கிறது. ஏரியின் நடுவே ஐந்து முக்கிய தீவுகள் உள்ளன. 80 வகையான மீன் இனங்கள் காணப்படுகின்றன. காஷ்மீரில்உள்ள 'வுலர் ஏரி', இந்தியாவில் பெரிய நன்னீர் ஏரி என அழைக்கப்படுகிறது. இதன் பரப்பளவு 189 சதுர கி.மீ.,
