/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக மூட்டுவலி தினம்
/
தகவல் சுரங்கம் : உலக மூட்டுவலி தினம்
PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக மூட்டுவலி தினம்
உலகில் 50 கோடி மூட்டு வலி / முடக்குவாத பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டுவலி / முடக்குவாதம் (ஆர்த்ரிடிஸ்) என்பது கால், கை விரல், தோள்பட்டை என உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியது. இதற்கு உடல்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, காச நோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது போன்றவை பொதுவான காரணங்கள். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.12ல் உலக மூட்டுவலி தினம் கடைபிடிக்கப்படுகிறது.இன்று இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.