உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 14, 2026 12:48 AM

அ நிறம் | அளவு
இந்தியாவின் வடமேற்கில் உள்ள மாநிலம் பஞ்சாப். இந்தியா - பாக்., பிரிவினையின் போது பஞ்சாப் பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், 553 கி.மீ., துாரம் இந்தியா - பாக்., எல்லையை கொண்டுள்ளது. 'பஞ்ச்' என்றால் ஐந்து, 'ஆப்' என்றால் நீர் என பொருள்.
பஞ்சாபில் சட்லஜ், பியாஸ், ராவி, செனாப், ஜீலம் ஆகிய ஐந்து நதிகள் ஓடுகின்றன. இவை இப்பகுதியை வளமாக்குகிறது. இதனால் 'இந்தியாவின் தானியக் களஞ்சியம்' என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் கோதுமை உற்பத்தியில் உ.பி., ம.பி.,க்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பஞ்சாப் உள்ளது.
