/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய வாக்காளர் தினம்
/
தகவல் சுரங்கம் : தேசிய வாக்காளர் தினம்
PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய வாக்காளர் தினம்
இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜன. 25ல் தொடங்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அதிகாரம் மிக்கது. இதன் 60வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக 2011 ஜன. 25ல் தேசிய வாக்காளர் தினம் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டது. நாட்டில் ஊராட்சி தலைவர் முதல் பிரதமர் வரை மக்கள் ஓட்டளிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 18 வயது பூர்த்தி செய்த ஒவ்வொருவரும் தவறாமல் ஓட்டளிப்பது ஜனநாயக கடமை. அதே போல 18 வயது நிரம்பியவர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பது அவசியம். அடையாள அட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

