உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 21, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ஏரிகளின் பெயர்க் காரணம்
ஏர் அல்லது கலப்பை, நிலத்தை கிளறி பயிர் செய்வதற்கு உதவும் கருவி. அதனால் தான் வேளாண்மையை ஏர் தொழில் என்றனர். இதற்கு பயன்படும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் நிலையம் என்பதால் ‘ஏரி’ என பெயர்க் காரணம் பெற்றது. ஏரியைச் சார்ந்துள்ள ஊர்களின் பெயர்களிலும் 'ஏரி' உள்ளது. பல்லவ மன்னனால் வெட்டப்பட்டது பல்லவனேரி. பாண்டிய மன்னனால் வெட்டப்பட்டது மாறனேரி. ஆறுமுகக் கடவுளாகிய முருகனின் பெயரால் அமைந்தது ஆறுமுகனேரி. இந்த ஏரிகளின் பெயரிலேயே ஊர்ப்பெயர்களும் அமைந்துள்ளன. ஸ்ரீவல்லப பாண்டிய மன்னன் வெட்டிய ஏரி என்பதால், ஸ்ரீ வல்லப பாண்டியன் ஏரி என அழைக்கப்பட்டு, பின்னாளில் சீவலப்பேரி என மாறியது.
