/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: உலகின் நீளமான கப்பல்
/
தகவல் சுரங்கம்: உலகின் நீளமான கப்பல்
PUBLISHED ON : அக் 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலகின் நீளமான கப்பல்
உலகில் வடிவமைக்கப்பட்ட நீளமான கப்பல் ஜப்பானின் 'சிவைஸ் ஜியன்ட்'. இதன் நீளம் 1504 அடி. அகலம் 225 அடி. 1979ல் பயன்பாட்டுக்கு வந்தது. கச்சா எண்ணெய் பேரல்களை ஏற்றிச்செல்ல பயன் படுத்தப்பட்டது. இது மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் செல்லும். 41 லட்சம் பேரல்களை தாங்கி செல்லும். 1988ல் ஈரான் - ஈராக் போரின் போது குண்டுவீச்சில் சேதமடைந்தது. பின் சீரமைக்கப்பட்டு 1991ல் மீண்டும் பயணித்தது. 2009ல் இக்கப்பல் குஜராத் நிறுவனத்துக்கு விற்கப்பட்டு, உடைக்கப்பட்டது. தற்போதைய கப்பல்களில் நீளமானது தென்கொரியாவின் 'டி1-கிளாஸ் சூப்பர்டேங்கர்'. நீளம் 1246 அடி.

