உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 16, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
திருவண்ணாமலை பழமொழிகள்
அருணாசலபுராணம் என்ற நுாலை சைவ எல்லப்ப நாவலர், 16ம் நுாற்றாண்டில் தொகுத்தார். இந்த நுால் திருவண்ணாமலையின் வரலாற்றைக் கூறுகிறது. இதனால் தான் 'அண்ணாமலையில் பிறந்தவனுக்கு அருணாசல புராணம் தெரியாதா' எனும் பழமொழி வந்தது. திருவண்ணாமலையில் இறைவனை விட சாது, சன்னியாசி, சாமியார்களுக்கு தான் அதிக சிறப்பு என்பதை வெளிப்படுத்தும் வகையில் 'அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூஜை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூஜை' என்பர். வீண் செலவு, தண்டச் செலவைக் குறிக்க 'உண்ணாமல் தின்னாமல் அண்ணாமலைக்கு அரோகரா' என கூறுவர்.
