உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 05, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
துாக்கு தண்டனை குறித்து உலகில் இருவித கருத்துகள் உள்ளன.
இந்தியாவில் அரிதினும் அரிதான குற்றங்களுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதுவும் உடனே நிறைவேற்றப்படுவதில்லை. கீழ் நீதிமன்றத்தில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம். அதிலும் உறுதி செய்யப்பட்டால், உச்சநீதிமன்றம் செல்லலாம். அதிலும் உறுதியானால், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்யலாம். பின் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பலாம். அவர் நிராகரித்தால் குற்றவாளி துாக்கிலிடப்படுகிறார்.
