PUBLISHED ON : ஆக 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா., தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டுதல், அவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுறுத்தி ஆக., 13ல் உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இடது கை பழக்கம் ஒருவருக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. இது ஒருவரது மூளை வளர்ச்சியை பொறுத்து அமைகிறது. இவர்கள் வலது பக்க மூளையை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களுக்கு ஞாபக திறன் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.