/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
பருவநிலை மாற்றத்தால் இடம்பெயரும் காடுகள்
/
பருவநிலை மாற்றத்தால் இடம்பெயரும் காடுகள்
PUBLISHED ON : ஜன 29, 2026 07:30 AM

உலகின் செழுமையான காடுகளை, பருவநிலை மாற்றம், சத்தமின்றி உருமாற்றத் துவங்கியுள்ளது. தென் அமெரிக்கக் காடுகளில், கடந்த நாற்பது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒட்டுமொத்த மர இனங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மேலோட்டமான நிலைத்தன்மைக்கு பின்னால், ஒரு பெரிய பிராந்திய இடம்பெயர்வு ஒளிந்திருப்பதை ஆய் வாளர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். அதாவது, காடுகள் அழியவில்லை; மாறாக அவை இடம் மாறத் து வங்கியுள்ளன.
'நேச்சர்' இதழில் வெளியான இந்த ஆய்வின்படி, அமேசான் மற்றும் ஆண்டிஸ் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தரவுகள், 1980-களிலிருந்து உயர்ந்து வரும் வெப்பமும் மாறிவரும் மழைப்பொழிவும், மரங்களின் பரவலை மாற்றியமைப்பதை காட்டுகின்றன.
கிழக்கு அமேசான் மற்றும் மத்திய ஆண்டிஸ் போன்ற வெப்பமான வறண்ட பகுதிகளில், பல தாவர இனங்கள் குறைந்து வருகின்றன.
இந்த நிலையில், ஈரப்பதம் மிகுந்த வடக்கு ஆண்டிஸ் மற்றும் மேற்கு அமேசான் பகுதிகளில் புதிய காட்டுத் தாவர இனங்கள் பெருகி வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இது காடுகளின் அழிவை விடவும், அவற்றின் மறுவினி யோகத்தையே (Redistribution) அதிகம் உணர்த்துகிறது.
அதாவது, பருவநிலை மாற்றம், உயிரினங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பதிலாக, அவற்றை மலைகளின் உச்சியை நோக்கியோ அல்லது குளிர்ச்சியான மேற்கு பகுதிக்கோ மெல்ல நகர்த்தி வருகிறது. வட ஆண்டிஸ் மலைத்தொடர் தற்போது ஒரு தற்காலிகப் புகலிடமாகச் செயல்படுகிறது.
எனினும், நீண்டகால வெப்பமயமாதல், இந்தக் காடுகளின் தன்மையை எப்படி மாற்றும் என்பது குறித்த ஆய்வு இன்னும் முழுமையடையவில்லை.

