PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட உலக சுற்றுச்சூழல் ராஜதந்திரத்திற்கு பலன் கிடைக்கத் துவங்கிவிட்டது. வியன்னா உச்சி மாநாடு, மாண்ட்ரியேல் உச்சி மாநாடு போன்றவற்றில் எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களால், பல நாடுகள், ஓசோன் படலத்தை சிதைக்கும் வேதிப்பொருட்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளன. உலக அளவில், இந்த அபாயகரமான பொருட்களில் 99 சதவீதம் படிப்படியாக நீக்கப்பட்டுள்ளன.
அன்டார்டிக் பகுதியின் மேல், கடந்த 2020 முதல் 2023 வரை இருந்த ஓசோன் துளையின் சராசரி அளவைவிட, 2024ல் இருந்த துளை சிறியதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் அளவிட்டுள்ளனர். ஒப்பந்தத்தில் ஒப்பமிட்ட நாடுகள், தங்கள் வாக்குறுதிகளை தொடர்ந்து கடைப்பிடித்தால், இந்த நுாற்றாண்டின் மத்தியில், பெரும்பாலான பகுதிகளில் ஓசோன் அடுக்கு 1980களில் இருந்த நிலைக்குத் திரும்பிவிடும். இந்த வெற்றிக் கதை, சுற்றுச்சூழல் ஆர்வலர் களுக்கு அசாத்தியமான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.